ரசமலாய் (Rasamalai receip in tamil)

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

ரசமலாய் (Rasamalai receip in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒன்றரை மணி நேரம
நான்கு பேர்
  1. ஒன்றரை லிட்டர் பால்
  2. ஒன்றரை கப் சர்க்கரை
  3. 1 எலுமிச்சை பழம்
  4. 10 பாதாம் மற்றும் பிஸ்தா
  5. ஒரு சிட்டிகை குங்குமப்பூ
  6. 5 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

ஒன்றரை மணி நேரம
  1. 1

    ஒன்றை ஒரு லிட்டர் பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும். பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சை பழச்சாறை ஊற்றவும். பால் திரிந்து பனீர் தனியாகவும் நீர் தனியாகவும் ஆகிவிடும்.

  2. 2

    ஒரு சுத்தமான மெல்லிய பருத்தித் துணியில் திரிந்த பாலை ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும். பின்பு நல்ல தண்ணீரை 5 அல்லது 6 டம்ளர் ஊற்றி எலுமிச்சை புளிப்பு போக பனீரை நன்கு அலசிக் கொள்ளவும். பின்பு மூட்டை போல கட்டி ஒரு வடிதட்டின் மேல் வைத்து மேலே அழுத்தத்திற்கு ஏதாவது பலுவை வைக்கவும். இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு பிறகு பனீரை உபயோகிக்க வேண்டும்.

  3. 3

    ஒரு டேபிள்ஸ்பூன் வெந்நீரில் குங்குமப்பூவை ஊறவிடவும். மீதி இருக்கும் அரை லிட்டர் பாலை ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி பாதி அளவு ஆகும் வரை சுண்டக் காய்ச்சவும். இடையிடையே பாலை கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அரை கப் சர்க்கரை மற்றும் குங்குமப்பூ கரைசலை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிடவும். பின்பு பொடியாக நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தாவை சேர்த்து ஒரு நிமிடம் கொதித்த பிறகு அடுப்பை அணைக்கவும். ஏலக்காய் பொடியை சேர்த்து கலக்கவும். ரசமலாய்க்கான ரப்டி ரெடி.

  4. 4

    இரண்டு மணி நேரம் ஆனவுடன் பனீரை எடுத்து ஒரு பத்து நிமிடம் நன்றாக பிசையவும். அப்போதுதான் உடையாமல் உருண்டை பிடிக்கும் அளவுக்கு மென்மையாக இருக்கும். பின்பு எலுமிச்சை பழ அளவுக்கு உருண்டையாக உருட்டி இரண்டு உள்ளங்கைகளால் அழுத்தி படத்தில் உள்ளது போல தட்டையாக செய்து கொள்ளவும்.

  5. 5

    ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரையில் 2 கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் தட்டி வைத்த பனீரை சர்க்கரை ஜீராவில் ஒவ்வொன்றாக போட்டு ஏழிலிருந்து பத்து நிமிடம் வேகவிடவும். பின்பு அவற்றை ஜீராவில் இருந்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். ஜல்லி கரண்டியால் பனீரை லேசாக அழுத்தி ஜீராவை பிழிந்து விடவும். பிறகு ஒரு அகலமான கிண்ணத்தில் பனீர் உருண்டைகளை வைத்து அதன் மேலே தயாரித்து வைத்துள்ள பாலை ஊற்றி ஒரு மணி நேரம் ஊற விடவும். சுவையான ஸ்பாஞ்சியான ரசமலாய் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
Hello dear 🙋
All your recipes are yummy. You can check my profile and like, comment, follow me if u wish 😊😊

Similar Recipes