ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#magazine2 பருப்பு உருண்டை குழம்பு பெரும்பாலும் கடலை பருப்பு வைத்து செய்வார்கள் நான் எப்பொழுதும் துவரம்பருப்பு வைத்து தான் செய்வேன்.. இந்த முறையை ரேஷன் கடையில் வாங்கிய துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன் சுவை அருமையாக இருந்தது...

ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு

#magazine2 பருப்பு உருண்டை குழம்பு பெரும்பாலும் கடலை பருப்பு வைத்து செய்வார்கள் நான் எப்பொழுதும் துவரம்பருப்பு வைத்து தான் செய்வேன்.. இந்த முறையை ரேஷன் கடையில் வாங்கிய துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன் சுவை அருமையாக இருந்தது...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1கப் துவரம் பருப்பு
  2. 2காய்ந்த மிளகாய்
  3. 1கப் தேங்காய் துருவல்
  4. 2பெரிய வெங்காயம்
  5. 1தக்காளி
  6. 4ஸ்பூன் எண்ணெய்
  7. 1ஸ்பூன் கடுகு
  8. 1ஸ்பூன் சீரகம்
  9. 1/4ஸ்பூன் வெந்தயம்
  10. 12பல் பூண்டு
  11. 1கொத்து கறிவேப்பிலை
  12. 1எலுமிச்சை அளவு புளி
  13. 4ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  14. சிறிதளவுகொத்தமல்லி
  15. 1/2ஸ்பூன் மஞ்சள்தூள்
  16. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    மிக்ஸி ஜாரில் அரை கப் தேங்காய் துருவல், இரண்டு மிளகாயை முதலில் அரைத்து விட்டு அத்துடன் ஊறிய பருப்பையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.. அரைத்த மாவுடன் சிறிது நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு சேர்த்து பிசைந்து உருட்டி கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும்

  4. 4

    அதனுடன் வெங்காயத்தையும் கருவேப்பிலையும் பூண்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.. வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்

  5. 5

    எல்லாம் வதங்கியதும் அதனுடன் புளிக் கரைசலையும் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.. கரைசலில் மிளகாய் தூளையும், மஞ்சள் தூளையும் கலந்து விடவும்

  6. 6

    உருண்டையை நன்றாக புளி கொதிக்கும் போது தான் சேர்க்க வேண்டும்... கொதிக்கவில்லை என்றால் உருண்டை தண்ணீரில் கரைந்து விடும்... புளிக்கரைசல் தரதரவென்று கொதிக்க வேண்டும்... இப்போது உருண்டையை ஒவ்வொன்றாக மெதுவாக சேர்க்கவும்

  7. 7

    வெந்தவுடன் உருண்டை தானாகவே மேலே வந்துவிடும்... 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும்.. குழம்பிற்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்..

  8. 8

    உருண்டை வெந்த பிறகு அதில் மீதமுள்ள தேங்காய் துருவலை அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.. இரண்டு நிமிடம் நன்றாக கொதித்தவுடன் அதில் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

  9. 9

    ரேஷன் கடை பருப்பை வைத்து சுவையான பருப்பு உருண்டை குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes