ராகி ரவா உப்புமா(ragi rava upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ராகி, ரவா முந்திரி பச்சை பட்டாணி, கேரட் வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கி எடுத்து வைக்கவும்.ஒரு வாணலியில் 4 ஸ்பூன் ஆயில் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து ரவை ராகி மாவு சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுக்கவும். ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். வாணலியில்,நான்கு ஸ்பூன்ஆயில் விட்டு கடுகு உளுந்து முந்திரி தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பச்சை பட்டாணி கேரட் துருவிய இஞ்சி சிறிதளவு கறிவேப்பிலை மல்லித்தழை சேர்த்து நன்கு வதக்கவும். 4 கப் தண்ணீர் தேவையான உப்பு போட்டு கலந்து விடவும்.
- 2
மூடி வைத்து கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து வறுத்த ரவை ராகி மாவை தூவி கிளறவும். கட்டி விழாமல் கிளறி விடவும்.சிறிதளவு நெய் விட்டு கலந்து மூடி வைத்து ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும். மல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான ராகி ரவா உப்புமா தயார்.
- 3
பொட்டுக்கடலை தேங்காய் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.
- 4
எப்பொழுதும் ஒரே மாதிரி ரவை உப்புமா செய்வதற்கு பதில் இந்த முறையில் ராகி மாவு சேர்த்து செய்யும்போது வித்தியாசமான சுவையுடன் இருந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ராகி ரவா தோசை (Ragi Rava Dosa Recipe in Tamil)
ராகி மிக அதிகமாக நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடை குறைக்கவும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் எடுத்து கொள்ள கூடியது.#chefdeena #ஆரோக்கிய சமையல் Vimala christy -
-
-
-
-
-
-
-
-
-
-
-
ராகி இட்லி(ragi idli recipe in tamil)
#made1 #ragi #ரவைசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
#cf5Missing letters contest,break fast recipies...ராகி எப்பொழுதும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது .வலு கொடுக்கும். சர்க்கரையை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். இது ஆரோக்கியமான பழமையான உணவு வகை. நரசுஸ் ரெடி ராகி சேமியா பாக்கெட் வாங்கி இதை செய்தேன். Meena Ramesh
More Recipes
கமெண்ட் (2)