பாலக் கீரை கடையல் (Spinach curry recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

பாலக் கீரை கடையல் (Spinach curry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
  1. 1கட்டு பாலக் கீரை
  2. 3பச்சை மிளகாய்
  3. 2பல் பூண்டு
  4. 5 சாம்பார் வெங்காயம்
  5. 1வற்றல்
  6. 1/4 டீஸ்பூன் சீரகம்
  7. 1சிறிய தக்காளி (optional)
  8. 1டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணை
  9. தேவையான அளவுஉப்பு
  10. 1டீஸ்பூன் ghee

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பாலக் கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் சீரிஸ்கம், வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், வற்றல், தக்காளி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள பாலக் கீரையை சேர்த்து ஒரு நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கவும். அதிகம் வேக வைக்க கூடாது. கலர் மாறிவிடும்.

  4. 4

    வேக வைத்து இறக்கிய கீரையை சூடு ஆறியவுடன் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு கலந்து ஒரு சுற்று விட்டு எடுத்தால் கீரை கடையல் தயார்.

  5. 5

    தயாரான கீரையை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் சுவையான பாலக் கீரை கடையல் சுவைக்கத் தயார்.

  6. 6

    இந்த பாலக் கீரை கடையல் சூடான சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
    குழந்தைகளுக்கு காரம் சேர்க்காமல் இதே போல் செய்து சாதம், கீரை, நெய் சேர்த்து நன்கு பிசைந்து சாப்பிட கொடுக்கலாம்.
    சத்தான, சுவையான பாலக் கீரை மசியலை அனைவரும் செய்து சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட் (6)

Renukabala
Renukabala @renubala123
Thank you so much.
Just one minute cook the keerai remove immediately and grind, that colour remains.

Similar Recipes