ஈஸி பாசிப் பருப்பு தால்(dal recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#Meena Ramesh,*
மீனா ரமேஷ் அவர்களது ரெசிபி.சத்தான பாசிப் பருப்பில் செய்து இருப்பதால், இதனை செய்யலாம் என்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.

ஈஸி பாசிப் பருப்பு தால்(dal recipe in tamil)

#Meena Ramesh,*
மீனா ரமேஷ் அவர்களது ரெசிபி.சத்தான பாசிப் பருப்பில் செய்து இருப்பதால், இதனை செய்யலாம் என்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பேர்
  1. 1 கப்பாசிப் பருப்பு
  2. 1/4 கப்வெங்காயம்(நறுக்கினது)
  3. 1/4 கப்தக்காளி(நறுக்கினது)
  4. 4ப.மிளகாய்
  5. 1 டீ ஸ்பூன்ம.தூள்
  6. 1 ஸ்பூன்காஷ்மீரி மி.தூள்
  7. 1 டீ ஸ்பூன்பெருங்காயத் தூள்
  8. 6 பல்பூண்டு
  9. 2 டீ ஸ்பூன்நெய்
  10. ருசிக்குகல் உப்பு
  11. 1 ஸ்பூன்சீரகம்
  12. 1 டீ ஸ்பூன்கடுகு
  13. 1 ஸ்பூன்உ.பருப்பு
  14. 1 ஸ்பூன்எண்ணெய்
  15. 1 ஆர்க்குகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் பாசிப் பருப்பு, ம.தூள், உப்பு போடவும்.

  2. 2

    அதனை குக்கரில் போட்டு,மூடி போட்டு மூடி முக்கால் பங்கு வேக வைத்துக் கொள்ளவும்.பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள், போட்டு தாளித்ததும்,, வெங்காயம்,நசு க்கின பூண்டு, ப.மிளகாய், உப்பு போட்டு வதக்கவும்.

  4. 4

    பின் தக்காளி, காஷ்மீரி மி.தூள்,கறிவேப்பிலை போட்டு வதங்கியதும்,அடுப்பை சிறிய தாக்கி, வெந்த பருப்பை போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஒன்று சேர கொதிக்க விடவும்.

  5. 5

    ஒன்று சேர கொதித்ததும், சிறிது உப்பு போட்டு மேலே நெய் விடவும்.பிறகு நன்கு கலந்து விட்டு, அடுப்பை நிறுத்தி விடவும்.

  6. 6

    பிறகு ஒரு பௌலில் மாற்றவும்.இப்போது, சுடசுட,* ஈஸி பாசிப் பருப்பு தால்* தயார்.இது, இட்லிக்கு ஆப்ட்டாக இருந்தது.செய்து பார்த்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes