காலிஃப்ளவர் குருமா(cauliflower kurma recipe in tamil

Dhivya
Dhivya @DhivyaA

காலிஃப்ளவர் குருமா(cauliflower kurma recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 300 கிராம் காலிபிளவர்
  2. 1 கைப்பிடி சின்ன வெங்காயம்
  3. 50 மில்லி எண்ணெய்
  4. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  5. 1 பத்தை தேங்காய்
  6. 2 தக்காளி
  7. 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  8. 2 தேக்கரண்டி மல்லித் தூள்
  9. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  10. 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  11. தேவையானஅளவு உப்பு
  12. தேவையானஅளவு தண்ணீர்
  13. கால் கப் கொத்தமல்லி இலைகள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    காலிஃப்ளவரை சுத்தம் செய்து கொஞ்சம் சுடு தண்ணீர் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும் இதனால் இதில் உள்ள சிறிய புழுக்கள் நீங்கி விடும்.

  2. 2

    குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அரைத்த வெங்காய விழுது மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் மல்லித்தூள் கரம் மசாலாத்தூள் கொஞ்சம் தண்ணீர் தெளித்து வதக்கவும்.

  3. 3

    இதில் காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் சிறு தீயில் வதக்கிய பின் தேங்காய் மற்றும் தக்காளி அரைத்த விழுது மற்றும் குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்துக் கலந்து குக்கரை மூடி ஒரு விசில் வந்த பின் அடுப்பை அணைக்கவும்.

  4. 4

    குக்கர் சூடு தணிந்த பின் குழம்பில் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து பரிமாறவும் சாதம் மற்றும் சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Dhivya
Dhivya @DhivyaA
அன்று

Similar Recipes