இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் கடலைப் பருப்பு வெங்காயம் பூண்டு இவற்றை கழுவி சேர்க்கவும். இதில் வர மிளகாய் சீரகம் சோம்பு கறிவேப்பிலை மஞ்சள்தூள் நறுக்கிய தக்காளி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொஞ்சமாக விளக்கெண்ணை ஊற்றி குக்கரை மூடி 2 விசில் வேகவிடவும்.
- 2
வெந்தபின் பருப்பு மற்றும் தண்ணீரை வடித்துக்கொள்ளவும். பருப்பை ஆறவிட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். பருப்பு தண்ணீரை மீண்டும் குக்கரில் சேர்த்து பொடியாக நறுக்கிய கேரட் உருளைக் கிழங்கு கத்தரிக்காய் இவற்றை சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வேகவிடவும்.
- 3
ஒரு தாளிப்பு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை சீரகம் பெருங்காயத்தூள் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து நீளவாக்கில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கவும் இதில் மிக்ஸியில் அரைத்த பருப்பு மற்றும் காய்கறி கலவை இவற்றை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 4
இதனை நன்றாக கொதிக்க வைக்கவும். நுரைக்க கொதித்த பின் அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலைகள் சேர்த்து இட்லியுடன் பரிமாற சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#nutrient2பொதுவாகவே பருப்பு வகைகள், காய்கறிகளில் அதிக விட்டமின் சத்து நிறைந்துள்ளது. இட்லி சாம்பார் ரெசிபியை நான் பகிர்கிறேன் Laxmi Kailash -
-
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
நான் ஏற்கனவே பதிவிட்ட சாம்பார் பொடி சேர்த்து செய்துள்ளேன். மேலும்,பூசணிக்காய் சேர்த்து செய்யும் இந்த சாம்பார்,மிகவும் சுவையாகவும்,டிபன் ரெசிப்பிகளுக்கு பொருத்தமானதாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
ரோட்டு கடை இட்லி சாம்பார்/ street style idly sambar receip in tamil
#vattram எளிமையான முறையில் தயாரிக்கலாம். Shanthi -
-
காய்கறி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் (kaaikari pongal, kaai kari sambar recipe in tamil)
#chefdeena Kavitha Chandran -
-
(ஒன் பாட்) இட்லி சாம்பார் (Idli Sambar Recipe in tamil)
#combo1 ஈர்க்கும் சுவையோடு அட்டகாசமான சுவையில் சாம்பார் அமைந்துவிட்டால் போதும்... இட்லியோ, பொங்கலோ, வடையோ வழக்கமாகச் சாப்பிடுவதைவிட ஒன்றிரண்டு கூடுதலாக உள்ளே இறங்கும். Ilakyarun @homecookie -
இட்லி,வடை,சாம்பார் (Idly,vadai,sambar)
#Vattaramகோயமுத்தூரில் அன்னபூர்ணா இட்லி,வடை சாம்பார் மிகவும் ஃபேமஸ். இங்கு கிடைக்கும்சாம்பாருக்கு உருகாத மனமே இல்லை. காபியும் கூட சேர்த்துக்கொள்ளவேண்டும். அதே சுவை அதே மணத்துடன் இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்காக. Renukabala -
-
கொள்ளு & பருப்பு சாம்பார்(kollu and paruppu sambar recipe in tamil)
#JP எப்பொழுதும் ஒரே மாதிரியாக சாம்பார் வைப்பதற்கு மாற்றாக செய்தேன். சுவையாக இருந்தது.அனைவரும் விரும்பினர்.நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
தமிழ்நாடு மாநில உணவு.மினி இட்லி சாம்பார் (mini Idly Sambar Recipe in tamil)
#goldenapron2 Santhi Chowthri -
-
-
இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
#clubகாலை நேர அவசரத்தில் ஒரு அடுப்புல இட்லி ஊற்றி வைத்து பக்கத்துல சாம்பார் க்கு ரெடி செய்தா இட்லி வேகற இருபது நிமிடத்தில் சாம்பார் மணக்க மணக்க ரெடி ஆகிவிடும் Sudharani // OS KITCHEN -
மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
-
இட்லி, பாசிப்பருப்பு சாம்பார் (Idli paasiparuppu sambar recipe in tamil)
Today Sunday so இட்லியுடன் சாம்பார் #photo Sundari Mani
More Recipes
கமெண்ட்