வாழை பூ சின்ன வெங்காயம் வடை(valaipoo vadai recipe in tamil)

வாழை பூ சின்ன வெங்காயம் வடை(valaipoo vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடலை பருப்பு கழுவி அதில் மிளகாய் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். சின்ன வெங்காயம் முக்கால் டம்ளர் அளவிற்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாழைப்பூ ஒன்றரை கப் அளவிற்கு ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும்.5 பல் பூண்டை நசுக்கி கொள்ளவும்.கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பெருங்காயத்தூள் மற்றும் சோம்பு எடுத்துக் கொள்ளவும். உப்பு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.. இரண்டு மூன்று டேபிள் ஸ்பூன் ஊற வைத்த முழு பருப்பை தனியாக எடுத்துக் கொள்ளவும
- 2
மீதி பருப்பை பச்சை மிளகாய் வர மிளகாய் பெருங்காயத்தூள் சோம்பு சேர்த்து கரகரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். ஆய்ந்த வாழைப்பூவை அரை டம்ளர் மேல் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். அதை தண்ணீர் பிழிந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். முழு பருப்பு,பொடியாக நறுக்கிய வெங்காயம், தட்டிய பூண்டு, வாழைப்பூ, தூள் உப்பு கருவேப்பிலை கொத்தமல்லி இவற்றை சேர்த்து அரைத்த வடை மாவில் நன்கு பிசைந்து கலந்து கொள்ளவும்.
- 3
ஒரு பக்கம் வானலியில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து காய வைக்கவும். அதற்குள் வடை மாவை தேவையான அளவிற்கு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். இப்போது உள்ளங்கையில் ஒரு உருண்டையை வைத்து மறு கையால் உள்ளங்கையில் அழுத்திவிட்டு காய்ந்த எண்ணெயில் போடவும். ஒருபுறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். மிதமான தீயில் இரண்டு புறமும் சிவக்க வைத்து எண்ணெய் முறைய அடங்கியவுடன் எடுக்கவும்.
- 4
சுவையான வாழைப்பூ சின்ன வெங்காய வடை தயார். மாலை நேரம் டீ காபியுடன் சாப்பிடலாம். அல்லது மதிய சாப்பாட்டிற்கு சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். புளி சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
வாழைப் பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#Cookpadtamil #contestalert #cookingcontest #homechefs #tamilrecipies #cookpadindia #arusuvai3 Sakthi Bharathi -
-
பீட்ரூட் மசாலா வடை (Beetroot masala vadai recipe in tamil)
பீட்ரூட் மசாலா வடை, பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ், இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட Shailaja Selvaraj -
-
-
-
-
-
-
-
மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
சைதாபேட்டை வடைகறி இல்லை; இது கலிபோர்னியா வடை கறி. நீராவியில் வேகவைத்த மசால் வடை , ஸ்பைஸி. மணமான , சுவையான கிரேவி, முதல் முறையாக செய்தேன், சுவைய்த்தேன் #steam Lakshmi Sridharan Ph D -
மசால் வடை
#Lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் சுட்டிகளுக்கு தின்பண்டம் எதுவும் வாங்கி தர முடியாது. தின்பண்ட கடைகள் அடைத்து வைத்துள்ளார் .ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மசால் வடை செய்தேன் .ஒரே மகிழ்ச்சி . Shyamala Senthil -
-
-
முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
#Grand2விரத நாட்களில் செய்யும் வடை ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil -
முட்டைக்கோஸ் வடை (Muttaikosh vadai recipe in tamil)
#arusuvai5குழந்தைகள் முட்டைக்கோஸ் விரும்பி சாப்பிட மாட்டார்கள். முட்டைக்கோஸை இப்படி வடையாக செய்து கொடுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Sahana D -
-
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
-
வாழைப்பூ, வாழை இலை, வாழைக்காய் வடை
#bananaவாழை தண்டு கிடைக்கவில்லை. கிடைத்தால் அதையும் சேர்க்கலாம் ஒரு வித்தியாசமான இந்த சத்தான சுவையான மொரு மொரு வடை வடைகளை குழந்தை முதல் முதியவர்கள் வரை சாப்பிடலாம். வாழை, பருப்புகள் ஏராளமான நார் சத்து கொண்டவை. இதில் உள்ள எல்லா உணவு பொருட்களும் நோய் தடுக்கும் சக்தி கொண்டவை. பருப்புகளில் ஏகப்பட்ட புரத சத்து. Lakshmi Sridharan Ph D -
-
கீரை வடை(keerai vadai recipe in tamil)
#HJசுவைமிக்க ஆரோக்கியமான மொறு மொறு அரைகீரை வடை. Nalini Shankar -
உளுந்து வடை (Ulunthu vadai Recipe in Tamil)
#Nutrient1உளுந்து வடை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம் .சாம்பார், தேங்காய் சட்னி இருந்தால் ,சுட சுட சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். உளுந்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் .பித்தத்தைக் குறைக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்குகெடுக்கும் .எலும்புகள் வலுப்பெறும் . Shyamala Senthil -
-
-
-
கர்நாடகா ஸ்பெஷல் மதுர் வடா🍽️☕ (Mathur vada recipe in tamil)
#deepfryஇது கர்நாடக மாநித்திலுள்ள மதுர் என்ற ஊரில் செய்யபடும் ஸ்பெஷல் மாலை நேர சிற்றுண்டி ஆகும்.அதனால் இதற்கு பெயர் மதுர் வடா ஆகும்.இந்த மாநிலத்தில் நடக்கும் விஷேஷங்களில் இது முக்கியமாக விருந்தில் பரிமாறப்படும். Meena Ramesh -
மோர் குழம்பு வடை (Mor kulambu vadai recipe in tamil)
#cookwithmilkமோர் குழம்பு வடை என்னுடைய சிறுவயதில் சாப்பிட்டுள்ளேன்.படுக்கி என்று எங்கள் தெருவில் எல்லராலும் அழைக்கப் படும் சௌராஷ்டிரா பெண்மணி இதை மாலை நேரத்தில் விற்பனை செய்வார். இரண்டு வடை 20 பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டு உள்ளேன். இன்று இந்த வடையை செய்யும் பொழுது என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. இன்று வடை செய்ய நான்கு வகை பருப்புகள் சேர்த்துள்ளேன். இது புரதம் மிகுந்த ஸ்நாக்ஸாக இருக்கும். மோர் குழம்பு செய்யும் அன்று இதுபோல் வடை செய்து மோர்க் குழம்பில் சேர்த்து செய்தால் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். Meena Ramesh -
More Recipes
கமெண்ட் (4)