மட்டன் உருளைக்கிழங்கு குழம்பு (Mutton Kulambu Recipe in Tamil)

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
Trivandrum

#உருளைக்கிழங்கு

மட்டன் உருளைக்கிழங்கு குழம்பு (Mutton Kulambu Recipe in Tamil)

#உருளைக்கிழங்கு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 டேபிள் ஸ்பூன்புதினா
  2. 4ஏலக்காய்
  3. 2 டேபிள்ஸ்பூன்கொத்தமல்லி இலை
  4. 1/2 கிலோமட்டன்
  5. 1உருளைக்கிழங்கு
  6. 1பெரிய வெங்காயம்
  7. 2தக்காளி
  8. 1பச்சை மிளகாய்
  9. 1/2 டீ ஸ்பூன்மிளகாய் தூள்
  10. 2 டேபிள் ஸ்பூன்மல்லித் தூள்
  11. 1/4 டீ ஸ்பூன்மஞ்சள் தூள்
  12. தேவையான அளவுஉப்ப
  13. ஒரு சிட்டிகைபெருங்காயத்தூள்
  14. 1/2 இன்ச்இஞ்சி
  15. 8பூண்டுபற்கள்
  16. 1/2 இன்ச்பட்டை
  17. 3கிராம்பு
  18. ஒரு சிறிய துண்டுஜாதிக்காய்
  19. 1/4 கப்தேங்காய் துருவல்
  20. 1/4 டீ ஸ்பூன்சீரகம்
  21. ஒரு கொத்துகருலேப்பில்லை
  22. 2 டேபிள் ஸ்பூன்நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    மட்டனை நன்றாக கழுவி எடுக்கவும்

  2. 2

    வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் பச்சை மிளகாயை நன்றாக நறுக்கிக் கொள்ளவும்

  3. 3

    மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் சீரகத்தை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்

  4. 4

    மிக்ஸி ஜாரில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், இஞ்சி மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.

  5. 5

    குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி சூடான பின் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  6. 6

    வெங்காயம் சிறிது வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

  7. 7

    பின்பு கருலேப்பில்லை, சிறிது கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து வதக்கவும்

  8. 8

    அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

  9. 9

    பின்பு மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகாய் தூள், மல்லிதூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

  10. 10

    இதனுடன் கழுவி வைத்துள்ள மட்டன் மற்றும் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி குக்கரை மூடி 10 விசில் வரும் வரை வேக வைக்கவும்(இளம் ஆட்டுக்கறியாக இருந்தால் விசில்களின் எண்ணிக்கையை குறைத்து கொள்ளவும்)

  11. 11

    விசில் அடங்கியதும் உருளைக்கிழங்கு மற்றும் தேங்காய் விழுது சேர்த்து மேலும் ஒரு விசில் வரும் வரை வேக வைத்து கொத்தமல்லி இலைகளை தூவி விடவும்.

  12. 12

    சுவையான மட்டன் உருளைக்கிழங்கு குழம்பு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
அன்று
Trivandrum
Preparing healthy food for a healthy family
மேலும் படிக்க

Similar Recipes