கடலைமாவு அல்வா (Kadalai Maavu Alwa Recipe in tamil)

Jeyapriya
Jeyapriya @cook_18242324

செய்முறை நேரம் 30 நிமிடம்

கடலைமாவு அல்வா (Kadalai Maavu Alwa Recipe in tamil)

செய்முறை நேரம் 30 நிமிடம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

6 பேருக்கு பரிமாறலாம்
  1. 2 கப்கடலை மாவு
  2. 1 1/2 கப்சீனி
  3. 3/4 கப்நெய்
  4. 2 1/2 கப்காய்ச்சிய பால்
  5. 3 பொடித்ததுஏலக்காய்
  6. 1 துளிகேசரி பவுடர்
  7. சிறிது முந்திரி அல்லது உலர் திராட்சை அல்லது பாதாம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    காய்ச்சிய பாலில் சீனியை சேர்த்து அது பாலில் கரையும் வரை அடுப்பில் வைத்து சூடாக்கி கொள்ளவும். அதை அப்படியே அடுப்பில் மிதமான சூட்டில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.முந்திரி அல்லது உலர் திராட்சை அல்லது பாதாமை நெய்யில் வறுத்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    இப்பொழுது ஒரு வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் கடலை மாவை சேர்த்து,அதனுடைய பச்சை வாசனை போகும் வரை மிதமான சூட்டில் வறுத்து கொள்ளவும்.

  3. 3

    மாவை நன்றாக வருத்ததும்,அதில் தயாராக வைத்துள்ள பாலை சிறிது,சிறிதாக சேர்த்து கொண்டே கிளறவும். மாவில் கட்டி சேராமல் பார்த்து கொள்ளவும்,அப்படியே கட்டி சேர்ந்தாலும் மிதமான சூட்டில் கிளறி கொண்டே இருந்தால் சரியாகிவிடும். மாவை கிளறும் போதே அதில் 1 ஸ்பூன் அளவு நெய்,கேசரி பவுடர், ஏலக்காய் இவை அனைத்தையும் சேர்த்து கிளறவும்.

  4. 4

    இப்பொழுது மாவு நன்றாக திரண்டு,அல்வா பதத்திற்கு வந்து வாணலியில் ஒட்டாமல் வரும்.இதுதான் சரியான பதம்.இப்பொழுது அடுப்பிலிருந்து வாணலியை இறக்கி,ஒரு நெய் தடவிய தட்டில் தயாராக உள்ள அல்வாவை சேர்த்து அதை சமன் படுத்தி கொள்ளவும்.அதன் மேல் வறுத்தெடுத்த முந்திரி அல்லது உலர் திராட்சை, பாதாம் சேர்த்து பரிமாறவும். இப்பொழுது சுவையான கடலை மாவு அல்வா ரெடி😊

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jeyapriya
Jeyapriya @cook_18242324
அன்று

Similar Recipes