பன்னீர் ஸ்டுபி டாமோடோ Paneer stuffed tomato Recipe in Tamil

Fahira
Fahira @cook_19272951

ரொட்டிக்கு வைத்து சாப்பிடும் இணை உணவு . ஸ்டார்டர் ஆகவும் பரிமாறலாம். #paneer #onerecipeonetree

பன்னீர் ஸ்டுபி டாமோடோ Paneer stuffed tomato Recipe in Tamil

ரொட்டிக்கு வைத்து சாப்பிடும் இணை உணவு . ஸ்டார்டர் ஆகவும் பரிமாறலாம். #paneer #onerecipeonetree

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 min
2 பரிமாறுவது
  1. 2பெரிய வெங்காயம்
  2. 1 டீஸ்பூன் நெய்
  3. 5தக்காளி
  4. 2பச்சை மிளகாய்
  5. 100கிராம்பன்னீர்
  6. 1டீஸ்பூன்சிறிதாக வெட்டிய இஞ்சி பூண்டு
  7. 1/2 டீஸ்பூன்மிளகாய் தூள்
  8. 1/2 டீஸ்பூன்கரம் மசாலா
  9. 1டீஸ்பூன்மல்லி தூள்
  10. 1 டீஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  11. 1/4 டீஸ்பூண்மிளகு தூள்
  12. 1 சிட்டிகைமஞ்சள் தூள்
  13. தேவையான அளவுஉப்பு
  14. மல்லி இலை தூவுவதற்கு

சமையல் குறிப்புகள்

20 min
  1. 1

    முதலில் 4 தக்களிகளில் குடைந்து எடுத்து கொள்ளவும்.குழம்பு மற்றும் ஸ்டப்பிங்குக்கு தேவையான பொருட்களை வெட்டி வைத்து கொள்ளவும்.

  2. 2

    ஸ்டபிங்குக்கு பன்னீர் பொடித்து கொள்ளவும், பின் 1 மிதமான பெரிய வெங்காயத்தை சிறிது சிறிதாக வெட்டி கொள்ளவும்.1 பச்சை மிளகு, இஞ்சி பூண்டு 1 டீஸ்பூன் சிறியதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

  3. 3

    பின் கொஞ்சம் உப்பு, 1/4 டீஸ்பூன் கரம் மசாலா,1/4 டீஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், 1/4 டீஸ்பூன் மிளகு தூள் சேர்த்து விரவி கொள்ளவும்.ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் பன்னீர் கலவையை போட்டு 2 நிமிடம் வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.

  4. 4

    குழம்புக்கு தேவையான காய்கறிகள், 1 பெரிய வெங்காயம், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 தக்காளி, 1 பச்சை மிளகாய், ஆகியவற்றை நீள வாக்கில் வெட்டி கொள்ளவும். பின் அதே கடாயில் போட்டு பொன்னிறமாகம் வரை வறுக்கவும். பின் ஆறவைத்து அரைக்கவும்.

  5. 5

    குடைந்த தக்களியினுள் ஸ்டபிங்கு வைத்து சுட்டு எடுக்கவும். பின் ஆறவைத்து அரைத்த கலவையை கடாயில் இட்டு 1 டீஸ்பூன் மல்லி தூள், 1/4டீஸ்பூண் மிளகாய் தூள்,1/4 டீஸ்பூன் கரம் மசாலா, 1/4 கப் தண்ணீர் விட்டு கொதி வந்ததும் சுட்ட தக்களியுடன் பரிமாறவும். கரம் குறைவாக வேண்டும் என்றால் மிள காய்த்தூள் குழம்பில் குறைத்து கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fahira
Fahira @cook_19272951
அன்று
Food photographer and content creator @favour_ur_flavour & blogger at favoururflavour.food.blog
மேலும் படிக்க

Similar Recipes