தாய் கிரீன் சிக்கன் நூடுல்ஸ் சூப் (Thai green chicken noodle soup recipe)

Gomathi Dinesh
Gomathi Dinesh @cook_19806205
UK

தாய் கிரீன் சிக்கன் நூடுல்ஸ் சூப் (Thai green chicken noodle soup recipe)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100கி வேகவைத்த சிக்கன்
  2. 2 தேக்கரன்டி ஆலிவ் எண்ணெய்
  3. பொடியாக நறுக்கிய இஞ்சி
  4. 1 தேக்கரண்டியளவு பொடியாக நறுக்கிய பூண்டு
  5. 2 மேஜைக்கரண்டி கிரீன் தாய் கறி சாஸ்
  6. 3 பச்சை மிளகாய்
  7. 1 குடைமிளகாய்
  8. 1வெங்காயம்
  9. 1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
  10. 1 மேஜைக்கரண்டி மீன் சாஸ்
  11. 1 கப் தேங்காய் பால்
  12. 6கப் சிக்கன் வேகவைத்த நீர்/ஸ்டாக்
  13. 1 கப் அரிசி நூடுல்ஸ்
  14. தேவையானஅளவு உப்பு
  15. 1 தேக்கரண்டியளவு துருவிய எலிமிச்ச்சை தோல்
  16. 2 மேஜைக்கரண்டி எலிமிச்சை சாறு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு துருவிய எலிமிச்சை தோல் சேர்த்து 2நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.

  2. 2

    நீலமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய் மற்றும் தாய் கிரீன் சாஸ் சேர்த்து வதக்கவும்

  3. 3

    வதங்கியதும் சிக்கன் வேகவைத்த நீர் சேர்த்து தேவையான உப்பு, மற்றும் சோயா சாஸ் மற்றும் மீன் சாஸ் சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    கொதிக்க ஆரம்பித்ததும் அரிசி நூடுல்ஸ் மற்றும் வேகவைத்த சிக்கன் சேர்த்து கொதிக்க விடவும்

  5. 5

    நூடுல்ஸ் நன்கு வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து தீயை அணைக்கவும்

  6. 6

    2நிமிடம் கழித்து எலிமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்.

  7. 7

    சுவையான ஆரோக்கியமான முழுமையான தாய் கிரீன் சிக்கன் நூடுல்ஸ் சூப் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gomathi Dinesh
Gomathi Dinesh @cook_19806205
அன்று
UK

Similar Recipes