நாட்டு கோழி முள்ளு குழம்பு (naatu kozhi mullu kulambu recipe in tamil)

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

நாட்டு கோழி முள்ளு குழம்பு (naatu kozhi mullu kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 3/4 கிலோ நாட்டு கோழி முள்ளு
  2. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  3. 150கிராம் சிறிய வெங்காயம்
  4. 2 தக்காளி
  5. 1/4டீஸ்பூன் மஞ்சள் பொடி
  6. தேவையானஅளவு உப்பு
  7. 1 கப் தேங்காய்
  8. 1டீஸ்பூன் சீரகம், சொம்பு
  9. 1டீஸ்பூன் மல்லி தூள்
  10. 2டீஸ்பூன் மிளகாய் தூள்
  11. கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    எலும்பை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்

  2. 2

    அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து வேக வைக்கவும்

  3. 3

    20 நிமிடம் கழிந்ததும் செறிய வெங்காயம், தக்காளி சேர்த்து வேக வைக்கவும்

  4. 4

    வேற ஒரு காடாய் வைத்து அதில் தேங்காய், சீரகம், சொம்பு, 5 சின்ன வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும், அதை மை போல் அரைத்து கொள்ளவும்

  5. 5

    அரைத்த விழுதை வேக வைத்த முள்ளு கூட சேர்க்கவும்

  6. 6

    மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்

  7. 7

    நன்கு வேக வைக்கவும்

  8. 8

    தாளிக்க சோம்பு, சீரகம், வெங்காயம், கருவேப்பில்லை சேர்த்து கொட்டவும்

  9. 9

    இட்லி, தோசைக்கு காரா சாரா குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes