ராகி பனானா கேக் (Raagi banana cake in tamil)

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772

கேக் என்பது குழந்தைகள்,பெரியவர்கள் என அனைவரும் விரும்பும் இனிப்பு வகை ஆகும் . நம் அன்புக்கு உரியவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் , ராகி,வாழைப்பழம் போன்ற சத்தான பொருள்களை கொண்டு நம் வீட்டிலேயே எளிமையாக கேக் செய்யலாம்.
#அன்பு
#book
#anbu

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கப் ராகி மாவு
  2. 1/2 கப் கோதுமை மாவு
  3. 1வாழை பழம்
  4. 1/2கப் தயிர்
  5. 1/4கப் எண்ணெய்
  6. 1தேக்கரண்டி பேக்கிங் பௌடர்
  7. 1/2தேக்கரண்டி பேக்கிங் சோடா
  8. 1தேக்கரண்டி தேன்
  9. 1கப் முந்திரி,உலர்திராட்சை
  10. 1கப் டூட்டி ப்ரூட்டி
  11. 3/4கப் சர்க்கரை
  12. 1தேக்கரண்டி வெண்ணிலா எஸென்ஸ்
  13. 1துளி உப்பு
  14. தேவையானஅளவு பால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரின் அடியில் சிறிய ஸ்டாண்டு வைத்து மிதமான தீயில் சூடு படுத்தவும்.

  2. 2

    ராகிமாவு,கோதுமை மாவு,பேக்கிங் சோடா,பேக்கிங் பௌடர் அனைத்தையும் மெல்லிய வடிகட்டி மூலம் சலித்து கொள்ளவும்.

  3. 3

    மிக்சி ஜாரில் வாழைப்பழம்,சர்க்கரை,தயிர், எண்ணெய், வெண்ணிலா எஸென்ஸ் சேர்த்து அரைக்கவும்.

  4. 4

    அரைத்த கலவையுடன் சலித்து வைத்த மாவு கலவை,தேன் மற்றும் அனைத்து உலர் பருப்பு வகைகளையும் சேர்த்து கலக்கவும்.தேவையான அளவு பால் சேர்த்து மெதுவாக கிளறவும்.

  5. 5

    ஓரு வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் மாவு கலவையை சேர்த்து குக்கரில் வைக்கவும். குக்கரில் தண்ணீர் ஊற்ற தேவை இல்லை. விசில் போட தேவை இல்லை.மிதமான தீயில் 50-60நிமிடம் வேக வைக்கவும்.

  6. 6

    சிறிய குச்சி வைத்து கேக் வெந்து விட்டதா என சோதனை செய்யவும்.ஆறிய பின் கத்தி வைத்து திருப்பி தட்டில் சேர்க்கவும்.

  7. 7

    மேலே உருகிய சாக்லேட் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
அன்று

Similar Recipes