தேவையான பொருட்கள்

  1. 1 கப் - பென்னே பாஸ்தா
  2. 3- தக்காளி
  3. 2 பல் - பூண்டு
  4. 1 தேக்கரண்டி - மிளகு பொடி
  5. 1 தேக்கரண்டி - மிக்சட் ஹெர்ப்ஸ்
  6. 1 தேக்கரண்டி - சில்லி ஃப்ளேக்ஸ்
  7. 2 தேக்கரண்டி - எண்ணெய்
  8. தேவையானஅளவு உப்பு
  9. 3 தேக்கரண்டி - பார்மேசன் சீஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளி யை ஐந்து நிமிடம் ப்ளான்ச் செய்து தோல் நீக்கி ப்யூரி செய்து கொள்ளவும்.

  2. 2

    பென்னே பாஸ்தாவை ஐந்து கப் கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்கவும்.

  3. 3

    பாஸ்தா வெந்ததும் வடிகட்டி வைக்கவும்.

  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, பூண்டு பல் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    வதங்கியதும் தக்காளி ப்யூரி சேர்த்து கொதிக்க விடவும்.

  6. 6

    சில்லி ஃப்ளேக்ஸ், மிளகுத்தூள், மிக்சட் ஹெர்ப்ஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும்.

  7. 7

    சாஸ் தயாரானதும் வேக வைத்த பென்னே பாஸ்தா சேர்த்து நன்கு கலந்து ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

  8. 8

    பார்மேசன் சீஸ் தூவிப் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes