தக்காளி சட்னி

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

கோல்டன் ஆப்ரான் புதிரில் 8 வார்த்தைகள் கண்டுபிடித்தோம் அதில் இரண்டு முக்கிய பொருட்களை வைத்து இந்த ரெசிபியை செய்துள்ளோம் தக்காளி மற்றும் இஞ்சியை இதற்கு முக்கியமாகும் இப்போ செய்முறையை பார்க்கலாம். #goldenapron3

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தக்காளி 250 கிராம்
  2. வெங்காயம் 250 கிராம்
  3. இஞ்சி 50 கிராம்
  4. காய்ந்த மிளகாய் ஐந்து
  5. பூண்டு ஒன்று
  6. சீரகத்தூள் அரைடீஸ்பூன்
  7. சோம்புத்தூள் அரைடீஸ்பூன்
  8. அரை டீஸ்பூன் கடுகு
  9. உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  10. கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்
  11. லவங்கம் 1
  12. பட்டை சிறிதளவு
  13. ஏலக்காய் 1

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காயவிடவும். காய்ந்தவுடன் காய்ந்த மிளகாயை சேர்த்து நன்றாக வரையறுத்து பொன்னிறமான உடன் எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது அதே எண்ணெயில் நறுக்கிய தக்காளியும் வெங்காயமும் பூண்டு இஞ்சி நான்கையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

  2. 2

    நன்றாக வதக்கிய பிறகு அதை எடுத்து தட்டில் போட்டு நன்றாக ஆற வைக்க வேண்டும்.ஆறிய பிறகு மிக்ஸியில் இட்டு நன்றாக அரைக்க வேண்டும்.

  3. 3

    இப்பொழுது மறுபடியும் அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்த பிறகு அரை டீஸ்பூன் அளவு கடுகு அளவு சேர்க்கவும். கடுகு நன்கு பொரிந்தது ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக பொரிந்தவுடன் அதில் சேர்த்து சிறிய துண்டு பட்டை, 1 லவங்கம் 1 ஏலக்காய் நல்லவங்க வதக்கிக் கொள்ளவும்.

  4. 4

    இப்பொழுது அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து அரை ஸ்பூன் சீரகத்தூள் அரை ஸ்பூன் சோம்பு தூள் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் ஒரு நிமிடம் கழித்து இறக்கி விடவும் இப்போது சுவையான தக்காளி சட்னி தயார் ஆகிவிட்டது. இதை நீங்கள் இட்லி தோசை சப்பாத்தி சாதனமும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி ‌.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Akzara's healthy kitchen
அன்று

Similar Recipes