எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. மட்டன்- 1/2 கிலோ
  2. சின்ன வெங்காயம்-1/4 கிலோ
  3. வர மிளகாய்-2-3
  4. இஞ்சி-2 துண்டு
  5. பூண்டு-1(8-10 பல்)
  6. வர கொத்தமல்லி- 4 டீஸ்பூன்
  7. சீரகம் -2 டீஸ்பூன்
  8. மிளகு -1 டீஸ்பூன்
  9. பட்டை -2கிராம்பு -4
  10. பிரியாணி இலை-1
  11. சோம்பு -1 டீஸ்பூன்
  12. தேங்காய் துருவல்- 4 டீஸ்பூன்
  13. எண்ணெய்-4 டீஸ்பூன்
  14. கடுகு-1 டீஸ்பூன்
  15. மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
  16. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.. சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி உரித்து வைத்துக் கொள்ளவும்... குக்கரில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு 1/2 டீஸ்பூன் போட்டு பொரிந்ததும் மட்டன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.. பின்னர் மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் சேர்த்து 7 விசில் விட்டு இறக்கவும்... ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் வர கொத்தமல்லி மிளகு சீரகம் வரமிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைக்கவும்.

  2. 2

    அதே கடாயில் சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்.. தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வதக்கவும்... ஆறிய பின்னர் இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். வேறு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு நன்றாக பொரிந்ததும் அதில் 5 நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்...

  3. 3

    பின்னர் அரைத்த கலவை சேர்த்து நன்றாக வதக்கவும்... எண்ணெயில் நன்றாக வதங்கியதும் வேக வைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும்...வேக வைத்த தண்ணீரை ஊற்றி நன்றாக வதக்கவும்... தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்...

  4. 4

    வறுவல் பதம் வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்... சூடான சுவையான மட்டன் வறுவல் ரெடி..இதை சாதம் இட்லி தோசை சப்பாத்தி பூரி என்று எல்லா வகை உணவுகளுக்கும் ஏற்ற வகையில் இருக்கும்.நன்றி... ஹேமலதா கதிர்வேல். கோவை பாசக்கார பெண்கள்..

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Hemakathir@Iniyaa's Kitchen
அன்று
Aruppukottai

Similar Recipes