தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. அரிசி மாவு - 1 கப்
  2. பால் - 1 கப்
  3. நெய் - 2 கரண்டி
  4. தேங்காய் துருவல் - 1/2 கப்
  5. வெல்லம் - 1 கப்
  6. சுடுநீர் - 1கப்
  7. உப்பு - தே.அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் அரிசி மாவுடன் உப்பு,சுடு நீர் சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின் வெல்லத்துடன் 1/2 கப் நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி கொள்ளவும். பின் பாலை ஒரு பாத்திரத்தில் காய வைத்தபின் கொழுக்கட்டைகளை சேர்த்து 2 நிமிடம் மிதமாக வேக விடவும்.

  2. 2

    வெந்ததும் வெல்லம்,சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து நெய் செர்த்து கொதிக்க விடவும். 2 கொழுக்கட்டை மாவை நன்கு கரைத்து கொதிப்பதில் சேர்க்கவும்.

  3. 3

    கெட்டி ஆனதும் தேங்காய் பூ, நெய் சிறிது சேர்த்து இறக்கினால் இனிப்பான பால் கொழுக்கட்டை தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathu's samayal
Fathu's samayal @cook_19944914
அன்று

Similar Recipes