எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. வெங்காயம் - 1
  2. தக்காளி - 2
  3. சீரகம் - 1 கரண்டி
  4. வெந்தயம் - 1 கரண்டி
  5. பூண்டு - 4 பல்
  6. மஞ்சள் தூள் - 1/2 கரண்டி
  7. மிளகாய் தூள் - 1 கரண்டி
  8. உப்பு - தே.அளவு
  9. மல்லி தூள் - 2 கரண்டி
  10. நல்லெண்ணெய் - தே.அளவு
  11. வத்தல் - விருப்பமானது
  12. அரிசி மாவு - 1 கரண்டி
  13. புளி - எலுமிச்சை அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பிடித்த வத்தலை வறுத்து தனியே வைக்கவும். பின் கடாயில் நல்லெண்ணெயில் சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.

  2. 2

    பின் உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள் சேர்த்து வதக்கவும். எண்ணெய் நன்கு பிரிந்ததும் வத்தல் சேர்த்து புளி கரைசலையும் சேர்க்கவும். நன்கு கொதி வந்ததும் 1 கரண்டி அரிசி மாவை தண்ணீரில் கரைத்து அதில் சேர்க்கவும்.

  3. 3

    நன்கு இருமுறை கொதித்ததும் இறக்கவும்.கமகமக்கும் கல்யாண வீட்டு வத்த குழம்பு தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Fathu's samayal
Fathu's samayal @cook_19944914
அன்று

Similar Recipes