ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி🌶

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

# ஸ்னாக்ஸ்
எப்பொழுதும்போல் பஜ்ஜி செய்யாமல் இதுபோன்று குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு ,பன்னீர் என வித்தியாசமாக ஸ்டஃப் செய்து பஜ்ஜி செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 5 பஜ்ஜி மிளகாய்
  2. பஜ்ஜி மாவு கரைக்க :-
  3. 2 கப் கடலை மாவு
  4. 1/2 கப் அரிசி மாவு
  5. 1டேபிள்ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள்
  6. பெருங்காயம்
  7. தேவைக்கேற்ப உப்பு
  8. உருளைக்கிழங்கு பூரணம் செய்ய:-
  9. 1வேகவைத்த உருளைக்கிழங்கு
  10. 1/2பொடியாக நறுக்கிய வெங்காயம்
  11. சிறிது இஞ்சி பூண்டு விழுது
  12. 1 பச்சை மிளகாய்
  13. தேவைக்கேற்ப உப்பு
  14. மஞ்சள்தூள்
  15. பன்னீர் பூரணம் செய்ய :-
  16. துருவிய பன்னீர்
  17. பொடியாக நறுக்கிய வெங்காயம்
  18. சிறிதுஇஞ்சி பூண்டு விழுது
  19. கரம் மசாலா
  20. சிவப்பு மிளகாய்த்தூள்
  21. இனிப்பு பொருளும் செய்ய
  22. 1டேபிள்ஸ்பூன் எள்ளு
  23. 1டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை
  24. சிறிது வெல்லம்
  25. சிறிது துருவிய தேங்காய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய், வேக வைத்த உருளைக்கிழங்கு,உப்பு,மஞ்சள் தூள்,சிவப்பு மிளகாய் தூள் என அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கி அதை பஜ்ஜி மிளகாயை நடுவில் கீறி ஸ்டப் செய்யவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய பன்னீர்,பச்சை மிளகாய்,சிறிது இஞ்சி பூண்டு விழுது,ஒரு சிட்டிகை கரம் மசாலா,ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி பஜ்ஜி மிளகாயை கீறி ஸ்டப் செய்யவும்.

  3. 3

    வெறும் கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை தூள், டேபிள்ஸ்பூன் எள்ளு துருவிய தேங்காய் தேவைக்கேற்ப வெள்ளம் சேர்த்து பூரணம் தயார் செய்யவும். பின்பு அதை ஸ்டஃப் செய்யவும்.

  4. 4

    கடலை மாவு,அரிசி மாவு, பெருங்காயத்தூள்,மிளகாய்த்தூள்,தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கட்டியில்லாமல் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக மாவு ரெடி செய்யவும். இப்போது ஸ்டப் செய்து ரெடியாக வைத்துள்ள மிளகாயை பஜ்ஜி மாவில் டிப்ஸ் செய்து சூடாக இருக்கும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes