வெஜ் டோஃபு மோமோஸ்

Raihanathus Sahdhiyya
Raihanathus Sahdhiyya @foodie_feeds
Tamil Nadu

#lockdown #book
இந்த லாக்டவுன் காலத்தில் அனைவரும் மிஸ் பண்ணுவது கடை மற்றும் உணவகங்களின் புகழ்பெற்ற உணவுகளைத்தான்... எனவே வீட்டிலேயே இருக்கும் காய்கறிகள் கொண்டு சுவையாக செய்திட, இதோ மோமோஸ் செய்முறை உங்களுக்கா..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. மோமோஸ் செய்ய:
  2. 2 கப் மைதா /கோதுமை மாவு
  3. 3/4 கப் தண்ணீர்
  4. 1/2 தேக்கரண்டி உப்பு
  5. 1 கப் துருவிய கேரட்
  6. 2 கப் துருவிய முட்டைக்கோசு
  7. 1/2 கப் துருவிய டோஃபு/ பனீர்
  8. 1 தேக்கரண்டி துருவிய பூண்டு
  9. 1/4 கப் நறுக்கிய வெங்காயம்
  10. 2 மேசைக்கரண்டி எண்ணெய்
  11. 1 தேக்கரண்டி மிளகுத்தூள்
  12. 1/2 தேக்கரண்டி வினிகர்
  13. தேவையானஅளவு உப்பு
  14. மோமோஸ் சட்னி செய்ய:
  15. 3 தக்காளி
  16. 3-4 காய்ந்த மிளகாய்
  17. 3 பல் பூண்டு
  18. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் ஊற்றி மிருதுவாக பிசையவும். 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு பிசைந்து 1/2 மணிநேரம் ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும்

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, துருவிய பூண்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அடுத்து துருவி வைத்த காய்களை சேர்த்து ஈரப்பதம் போகும் வரை வதக்கவும். (முழுதாக வெந்துவிடக் கூடாது)

  3. 3

    பிறகு மிளகுத்தூள், உப்பு மற்றும் வினிகர் சேர்த்து கிளறி விட்டு இறுதியாக துருவிய டோஃபு /பனீர் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும்

  4. 4

    1/2 மணிநேரம் கழித்து சிறு உருண்டைகளாக மாவை எடுத்து, சப்பாத்தி செய்வது போல் மெலிதாக தேய்க்கவும். நடுவில் 1 மேசைக்கரண்டி காய்கறிக் கலவை வைத்து மாவை சிறு சிறு மடிப்புகளாக மடித்து விரல்களைக் கொண்டு அழுத்தி சீல் செய்யவும்

  5. 5

    தயாரித்து வைத்துள்ள மோமோஸ்களை இட்லித்தட்டு அல்லது ஸ்டீமரில் வைத்து 12-15 நிமிடங்கள் அவித்து எடுக்கவும்.

  6. 6

    மோமோஸ் சட்னி செய்ய, தக்காளியில் கத்தி கொண்டு சிறிதாக கீறி கொதிக்கும் நீரில் 3-5 நிமிடங்கள் ப்லான்ச் செய்யவும். காய்ந்த மிளகாய்களையும் அந்த நீரில் போட்டு வைக்கவும்

  7. 7

    பிறகு தக்காளியின் தோலை உரித்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனுடன், ஊறிய காய்ந்த மிளகாய், பூண்டு, உப்பு சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.

  8. 8

    சுவையான மோமோஸ் சட்னியுடன் தயார்!!

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (4)

எழுதியவர்

Raihanathus Sahdhiyya
அன்று
Tamil Nadu
A post graduate student who has the hobby of cooking especially trying out new and healthy recipes
மேலும் படிக்க

Similar Recipes