எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சுண்டைக்காய் வத்தல் -30 நம்பர்
  2. தக்காளி -1 அரைத்து வைத்துக்கொள்ளவும்
  3. வெங்காயம் -1 அரைத்து வைத்துக்கொள்ளவும்
  4. புளி -1 எலுமிச்சை அளவு (தண்ணீரில் கரைத்து வைக்கவும்)
  5. மிக்சியில் அரைக்க
  6. குழம்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  7. துருவிய தேங்காய் -1 டேபிள் ஸ்பூன்
  8. தாளிக்க
  9. நல்ல எண்ணெய் -1 குழி கரண்டி
  10. கடுகு-1/4 டிஸ்பூன்
  11. வெந்தயம்-1/4 டீ ஸ்பூன்
  12. சோம்பு -1/4 டீ ஸ்பூன்
  13. கருவேப்பிலை-7-8 இலை
  14. பூண்டு -6 பல்

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரில் நல்ல எண்ணெய்யை விட்டு சுண்ட வத்தலை பொரித்து வைத்து கொள்ளவும்.அதே எண்ணெயில் கடுகு சேர்த்து.கடுகு பொரிந்ததும் வெந்தயம்,சோம்பு,கருவேப்பிலை,பூண்டு சேர்த்து வதக்கவும்.

  2. 2

    அரைத்த வெங்காயத்தை சேர்த்து நல்ல வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

  3. 3

    அடுத்து அரைத்து வைத்த தேங்காய் மற்றும் குழம்பு மிளகாய் தூள் கலவையை சேர்த்து வதக்கவும்.
    நல்ல வதங்கியதும் புளி தண்ணீர் சேர்த்து (புளிப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும்).தேவை பட்டால் ஒரு அரை கப் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.ஒரு 5 சுண்ட வத்தலை தட்டி போடவும்.எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு.

  4. 4

    குக்கரில் 2 விசில் வைத்து இறக்கவும்.

  5. 5

    இறக்கிய பின் மீதமுள்ள பொரித்த சுண்ட வத்தலை சேர்த்து கலந்து கொள்ளவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Stella Gnana Bell
Stella Gnana Bell @cook_22000820
அன்று

Similar Recipes