மட்டன் வெள்ளை குருமா

Mohamed Aahil
Mohamed Aahil @cook_20922920

மட்டன் வெள்ளை குருமா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

மட்டன் -1/2 கிலோ
  1. முந்திரி -10
  2. கச கசா -1 மேசைக்கரண்டி
  3. வெங்காயம் -1
  4. மல்லி பொதினா
  5. தயிர் -100கிராம்
  6. இஞ்சி -6 பல்
  7. பூண்டு -6பல்
  8. பச்சை மிளகாய் -2
  9. தேங்காய் எண்ணெய்
  10. நெய் -2 மேசைக்கரண்டி
  11. பட்டை -2துண்டு
  12. கிராம்பு -4
  13. ஏலக்காய்- -2
  14. எலுமிச்சை சாறு - 1மேசைக்கரண்டி
  15. தேவையானஅளவு உப்பு
  16. கரம் மசாலா -1/2 மேசைக்கரண்டி
  17. சோம்பு தூள் -1/2 மேசைக்கரண்டி

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் 10 முந்திரி மற்றும் ஒரு மேசை கரண்டி கச கசாவை தண்ணீரில் ஊற வைக்கவும் பிறகு ஒரு குக்கரில் கறியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்

  2. 2

    ஒரு வெங்காயம் கொஞ்சம் மல்லி பொதினா கட் பண்ணி வைக்கவும்.பிறகு 100 கிராம் தயிர் மிக்ஸியில் போட்டு அரைத்து வைக்கவும்

  3. 3

    அடுத்து அதே மிக்ஸியில் இஞ்சி 6 பல் பூண்டு 6 பல் மற்றும் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும். மறுபடியும் மிக்ஸியில் ஊற வைத்த முந்திரி கச கசா மற்றும் தேங்காய் சேர்த்து அரைத்து வைக்கவும்

  4. 4

    வேக வைத்த கறியையும் அதன் தண்ணீருடன் ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.இப்போது ஒரு குக்கரில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும்

  5. 5

    பிறகு வெங்காயம் மற்றும் பொதினா போட்டு வதக்கவும். அடுத்து இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும்.பிறகு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்

  6. 6

    இப்போது கரம் மசாலா,சோம்பு தூள் போட்டு வதக்கி பிறகு வேக வைத்த கறியை தண்ணீர்ருடன் சேர்க்கவும்

  7. 7

    பிறகு இதில் அரைத்து வைத்த தயிர், தேங்காய் முந்திரி கச கசா பேஸ்ட் மற்றும் பாதி எலுமிச்சை சாறு சேர்க்கவும்

  8. 8

    கடைசியாக மல்லி தழை தூவி ஒரு விசில் விட்டு எடுத்தால் சுவையான மட்டன் வெள்ளை குருமா ரெடி..உண்டு மகிழுங்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mohamed Aahil
Mohamed Aahil @cook_20922920
அன்று

Similar Recipes