மோர் வடை

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

Lock-down recipe.
, வெளியில் கடைகளில் எதுவும் வாங்கி சாப்பிட முடியாத நேரம்.
ஆகையால் வீட்டிலேயே சுவையான மோர் வடை செய்தேன். சுவையாக இருந்தது செய்துபாருங்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. இட்லி அரிசி ஒரு ஆழாக்கு
  2. கடலைப்பருப்பு அரை ஆழாக்கு
  3. பச்சரிசி மாவு 5 ஸ்பூன்
  4. வரமிளகாய் 12
  5. உப்பு தேவையான அளவு
  6. பெருங்காயம் ஒரு டீஸ்பூன்
  7. புளிப்பு தயிர் 4 ஸ்பூன்
  8. கருவேப்பிலை சிறிதளவு
  9. தாளிப்பதற்கு கடுகு உளுத்தம் பருப்பு
  10. ஊற வைத்த ஜவ்வரிசி மூன்று ஸ்பூன்
  11. தேங்காய் பொடியாக நறுக்கியது 3 ஸ்பூன்
  12. பொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    இட்லி அரிசி கடலைப்பருப்பு இரண்டையும் நன்கு கழுவி மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் வரமிளகாய் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுதுடன் 4 ஸ்பூன் கெட்டி தயிர் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் ஊற வைத்த ஜவ்வரிசி பொடியாக நறுக்கிய தேங்காய் அனைத்தையும் கலக்கவும். பச்சரிசி மாவு 4 ஸ்பூன் சேர்த்து கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

  2. 2

    மாவு கெட்டியாக இருக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த மாவை கரண்டியில் எடுத்து ஊற்றவும். ஒன்று ஊற்றியதும் மேலே எழும்பி வரும். அடுத்தது இன்னொன்று ஊற்றவும். வெந்து வரும் போது அடுப்பை சிம்மில் வைத்து முறுகலாக சுட்டு எடுக்கவும் சுவையான மோர் வடை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes