லாக்டவுன் எதிர்ப்பு சக்தி உணவு

Pavumidha
Pavumidha @cook_19713336
Chennai

#lockdown
#book
#லெமன் ரைஸ்
#சாதம
#சிக்கன் கிரேவி
#மட்டன் சூப்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பரிமாறுவது
  1. லெமன் ரைஸ்:::
  2. 3 லெமன்
  3. 1 கப் சாதம்
  4. 6 முந்திரி பருப்பு
  5. 1டீஸ்பூன் கருவேப்பிலை
  6. 1டீஸ்பூன் கடுகு உளுந்து பருப்பு
  7. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 1/2டீஸ்பூன் இஞ்சி துருவல்
  9. 1/2டீஸ்பூன் உப்பு
  10. 1/2டீஸ்பூன் கடலை பருப்பு
  11. 1டீஸ்பூன் எண்ணெய்
  12. சிக்கன் கிரேவி::::
  13. 1/2 கப் சிக்கன்
  14. 1 வெங்காயம்
  15. 1 தக்காளி
  16. 2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  17. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  18. 2டீஸ்பூன் சிக்கன் தூள்
  19. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  20. 1/2டீஸ்பூன் உப்பு
  21. 1டீஸ்பூன் மல்லி தழை
  22. 2டீஸ்பூன் கருவேப்பிலை
  23. மட்டன் சூப்:::
  24. 1 கப் மட்டன்
  25. 2 வெங்காயம்
  26. 1 தக்காளி
  27. 8 பூண்டு
  28. 2 கிராம்பு
  29. 1ஏலக்காய்
  30. 1/2 பட்டை
  31. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  32. 1டீஸ்பூன் மல்லி தூள்
  33. 1டீஸ்பூன் சீரகம்
  34. 2டீஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    லெமன் சாதம் :::கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து பருப்பு,கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் கடலை பருப்பு மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து கிளறவும்.

  2. 2

    பின்னர் லெமன் சாறு சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.கரைசல் கொதித்ததும் சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.5 நிமிடம் பின் அடுப்பை அணைக்கவும். சுவையான லெமன் சாதம் தயார்

  3. 3

    சிக்கன் கிரேவி:::குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.4 நிமிடம் பின் தக்காளி சேர்த்து கிளறவும்.

  4. 4

    இதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள்,சிக்கன் தூள் சேர்த்து கிளறவும். பின் கருவேப்பிலை,மல்லி தழை மற்றும் தண்ணீர் ஊற்றி 4 விசில் விட்டு இறக்கினால் சுவையான சிக்கன் கிரேவி தயார்.

  5. 5

    மட்டன் சூப் :::மிக்ஸியில் வெள்ளை பூண்டு, வெங்காயம்,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,மல்லி தூள்,மஞ்சள் தூள், சீரகம் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

  6. 6

    குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பின்னர் மட்டன் துண்டுகளை சேர்த்து கிளறவும்.

  7. 7

    இதில் அரைத்த மசாலா சேர்த்து கிளறவும். இதனுடன் உப்பு மற்றும் தக்காளி சேர்த்து கொள்ளவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 விசில் வந்ததும் இறக்கினால் சுவையான மட்டன் சூப் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pavumidha
Pavumidha @cook_19713336
அன்று
Chennai

Similar Recipes