இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#immunity #book
இஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பேர்
  1. இரண்டு முழு பூண்டு (20 to 25 பூண்டு பல்கள்)
  2. ரெண்டு இன்ச் இஞ்சி
  3. 10 சின்ன வெங்காயம்
  4. ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளி
  5. தாளிக்க:
  6. 3 ஸ்பூன் எண்ணெய்
  7. ஒரு ஸ்பூன் கடுகு
  8. அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  9. கால் ஸ்பூன் பெருங்காயத்தூள்
  10. சிறிதளவுகருவேப்பிலை
  11. ஒரு காய்ந்த மிளகாய்
  12. 2 ஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள்
  13. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  14. அரைத்துக்கொள்ள
  15. ரெண்டு ஸ்பூன் வரக்கொத்தமல்லி
  16. ஒரு ஸ்பூன் கடலை பருப்பு
  17. அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  18. அரை ஸ்பூன் சீரகம்
  19. கால் ஸ்பூன் மிளகு
  20. மூன்று ஸ்பூன் துருவிய தேங்காய்
  21. ஒரு ஸ்பூன் பொடித்த வெல்லம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    10 சின்ன வெங்காயத்தை நீள வாக்கில் அரிந்து கொள்ளவும். இரண்டு முழு பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். 2 இன்ச் நீளமுள்ள இஞ்சியை தோல் நீக்கி பொடிாக நறுக்கிக்கொள்ளவும். புலியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் ஒரு ஸ்பூன் கடுகு அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு கால் ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு வரமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.அதில் அரிந்த வெங்காயத்தை ஒரு நிமிடம் சேர்த்து வதக்கவும். மீண்டும் அதில் பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ளவும். ஒரு 3 நிமிடம் வதங்க விடவும்.

  3. 3

    வெங்காயம், பூண்டு நன்கு வதங்கிய பின் அதில் இரண்டு ஸ்பூன் சாம்பார் தூள் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடிவைத்து வேகவிடவும்.

  4. 4

    வேறு ஒரு தனி கடாயில், ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் ரெண்டு ஸ்பூன் வரக்கொத்தமல்லி,ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் மிளகு, இரண்டு வர மிளகாய் மற்றும் பொடியாக அறிந்து வைத்த இஞ்சியை சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும். இஞ்சி வாசம் வந்தவுடன் 3 ஸ்பூன் தேங்காய் துருவலை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இவற்றை ஆற வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  5. 5

    பூண்டு வெங்காயம் வெந்தவுடன் கரைத்து வைத்த புளித்தண்ணீரை சேர்த்து ஒரு கொதி விடவும். அரைத்து வைத்த விழுதை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும். கடைசியாக ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்க்கவும்.. இப்போது இஞ்சி பூண்டு குழம்பு சாப்பிடுவதற்கு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes