கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#goldenapron3 #carrot #book
கொண்டைக்கடலை உடல்நலத்திற்கு மிக மிக நல்லது. சத்து நிறைந்தது. தினமும் காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலை ஒரு பத்து தின்றால் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும். கொண்டைக்கடலையில் கேரட், மாங்காய் சேர்த்து பீச்சில் விற்கும் மாங்காய் தேங்காய் பட்டாணி சுண்டல் வகையில் இந்த கொண்டைக்கடலை சுண்டலை செய்துள்ளேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 1 கப் கொண்டைக்கடலை
  2. 3 பச்சை மிளகாய்
  3. ஒரு வர மிளகாய்
  4. ஒரு மீடியம் சைஸ் பெரிய வெங்காயம்
  5. ஒரு ஸ்பூன் இஞ்சித் துண்டுகள்
  6. 3 ஸ்பூன் தேங்காய் துருவல்
  7. 3 ஸ்பூன் துருவிய கேரட்
  8. 3 ஸ்பூன் பொடியாக அரிந்த மாங்காய் துண்டுகள்
  9. பொடியாக அரிந்த கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
  10. ஒரு பட்டை
  11. ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள்
  12. தாளிக்க
  13. ஒரு ஸ்பூன் எண்ணெய்
  14. அரை ஸ்பூன் கடுகு
  15. அரை ஸ்பன் உளுத்தம்பருப்பு
  16. உப்பு தேவையான அளவு
  17. ஒரு கிள்ளிய வரமிளகாய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதல் நாள் இரவே கொண்டைக்கடலையை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். குறைந்தது எட்டு மணி நேரம் ஊறட்டும்.மறுநாள் ஊறவைத்த கொண்டைக்கடலையை குக்கரில் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 5 விசில் விடவும். வெந்துவிட்டதா என்று பார்த்துக் தண்ணீர் வடித்து கொள்ளவும். பொடியாக ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். 3 பச்சை மிளகாய், இஞ்சித் துண்டுகள், துருவிய தேங்காய், பெருங்காயத்தூள்,ஒரு வரமிளகாய் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு வானலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்குவதக்கிக் கொள்ளவும். அதனுடன் வெந்த சுண்டலை சேர்த்துக் கொள்ளவும். அரைத்து வைத்த தேங்காய் விழுதையும் பிறகு சேர்க்கவும்.

  3. 3

    ஒரு நிமிடம் நன்கு இவற்றை கிளறி, ஒரு மூன்று நிமிடம் மூடி வைக்கவும். பிறகு துருவிய கேரட் 3 ஸ்பூன், 3 ஸ்பூன் நறுக்கிய மாங்காய் துண்டுகள் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி விடவும். சுவையான பீச்சில் விற்கப்படும் மசாலா சுண்டல் தயார். மாலை நேர ஸ்நாக்ஸாக குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக இதைக் கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes