தேவையான பொருட்கள்

  1. 1 பவுல் இட்லி மாவு
  2. 2துருவிய கேரட்
  3. 1டீஸ்பூன் கடுகு
  4. 1டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  5. 1 துண்டு பொடியாக நறுக்கிய இஞ்சி
  6. கருவேப்பிலை
  7. 2 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  8. 1 பொடியாக நறுக்கிய வெங்காயம்
  9. தேவைக்கேற்ப உப்பு
  10. மஞ்சள் தூள் சிறிதளவு
  11. பெருங்காயம் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கருவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் துருவிய கேரட் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அரைத்து வைத்திருக்கும் இட்லி மாவில் வதக்கிய கேரட்டை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  3. 3

    சூடேற்றி பணியாரக் கல்லில் எண்ணெய் ஊற்றி, அதில் கலந்த மாவை பணியாரமாக சுட்டெடுக்கவும். தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes