எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு கப் மோர்
  2. உருண்டை செய்வதற்கு தேவையான பொருட்கள் :
  3. ஒரு ஸ்பூன் பாசிப்பயிறு
  4. ஒரு ஸ்பூன் தட்டப்பயிறு
  5. ரெண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு
  6. ,ரெண்டு ஸ்பூன் அவரைப் பருப்பு
  7. ரெண்டு ஸ்பூன் துவரை பருப்பு
  8. இரண்டு வர மிளகாய்
  9. சிறு துண்டு இஞ்சி
  10. 3 பல் பூண்டு
  11. சிறிது கருவேப்பிலை
  12. அரை டீஸ்பூன் சீரகம்
  13. மோர் குழம்பு செய்வதற்கு அரைக்க தேவையான பொருட்கள் :
  14. 5 சின்ன வெங்காயம்
  15. பெரிய சைஸ் இஞ்சி
  16. அரை டீஸ்பூன் சீரகம்
  17. ஒரு டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு
  18. 2 பச்சை மிளகாய்
  19. ஒரு வரமிளகாய்
  20. ரெண்டு பெரிய கீர்த்தி தேங்காய்
  21. மோர்குழம்பு தாளிப்பதற்கு தேவையான பொருள்கள் :
  22. 10 சின்ன வெங்காயம்
  23. ஒரு சின்ன சைஸ் தக்காளி
  24. தேவையானஅளவு எண்ணெய்
  25. அரை டீஸ்பூன் கடுகு
  26. ஒரு டீஸ்பூன் கடலைப் பருப்பு
  27. ஒரு பச்சைமிளகாய்
  28. சிறிது கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஐந்து வகையான பருப்பையும் மூன்று மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் பருப்புடன் சேர்த்து இரண்டு வரமிளகாய் ஊறவைக்கவும் மூன்று மணி நேரம் ஊறிய பிறகு தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் ஊற வைத்த வரமிளகாய் பூண்டு இஞ்சி கருவேப்பிலை சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    கரகரப்பாக அரைத்த விழுது எடுத்து உருண்டை பிடித்து இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் மோர் குழம்பு க்கு தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்

  3. 3

    மிக்ஸி ஜாரில் வெங்காயம் இஞ்சி கடலைப்பருப்பு சீரகம் கருவேப்பிலை தேங்காய் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பொரிந்தவுடன் கடலைப்பருப்பு சேர்க்கவும் அதன் பிறகு வெங்காயத்தை வதக்கவும் அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளியை அதனுடன் சேர்க்கவும்

  4. 4

    தக்காளி வதங்கிய பின் அதில் மோரை சேர்க்கவும் மோரில் அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்கு கலக்கி விட்டு உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கலக்கி விடவும் அதன் பிறகு வெந்த உருண்டைகளை அதனுடன் சேர்த்து லேசாக கலக்கி விடவும் மோர் குழம்பு நன்கு நுரை கட்டி மேலே வந்து கொதிக்கும் பொழுது அடுப்பை அணைக்கவும் இப்போது ஐந்து பருப்பு உருண்டை மோர் குழம்பு ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736
அன்று

Similar Recipes