நெத்திலி கருவாடு ரோஸ்ட் (Netthili karuvaadu roast Recipe in Tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100 கிராம் நெத்திலிக்கருவாடு
  2. 20 சின்ன வெங்காயம்
  3. 11 தக்காளி
  4. 8 பல் பூண்டு
  5. 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. ஒரு கொத்து கறிவேப்பிலை
  8. தேவைக்கு உப்பு
  9. தேவைக்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    நெத்திலிக் கருவாடை முதலில் சுத்தம் செய்து கொள்ளவும்.

  2. 2

    வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி முதலில் கறிவேப்பிலை போட்டுத் தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.

  4. 4

    பிறகு பூண்டு சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பூண்டு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

  6. 6

    தக்காளி வதங்கியதும் கருவாடைச் சேர்த்து வதக்கவும்.

  7. 7

    மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக இளக்கி அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும்.

  8. 8

    ஒன்றிரண்டு முறை மூடியைத் திறந்து கிளறி விட்டு திரும்பவும் மூடி வைத்து வேக விடவும்.

  9. 9

    தண்ணீர் சுண்டி கருவாடு வெந்ததும் இறக்கவும்.

  10. 10

    சுவையான நெத்திலிக் கருவாடு ரோஸ்ட் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes