துவரம் பருப்பு, முருங்கை கீரை குழம்பு #book  #nutrient3

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

துவரம் பருப்பபில் நார் சத்தும், முருங்கை கீரையில் இரும்பு சத்தும் உள்ளது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி
ஆறு பேர்
  1. 1/2கப் துவரம் பருப்பு
  2. 2கப் சுத்தம் செய்த முருங்கை கீரை
  3. 1டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி 1/4கப் தேங்காய் துருவல்
  4. 1டேபிள் ஸ்பூன் சோம்பு
  5. 2வற்றல் மிளகாய்
  6. எண்ணை
  7. கடுகு
  8. சீரகம்
  9. 5சின்ன வெங்காயம்
  10. ஒரு தக்காளி
  11. உப்பு

சமையல் குறிப்புகள்

அரை மணி
  1. 1

    முதலில் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் இரண்டு விசில் வைத்துக்கொண்டு இறக்கவும்.

  2. 2

    முருங்கை கீரையை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயம் பொடியாக வெட்டி வைக்கவும்.

  3. 3

    இப்போது கடாயில் எண்ணை அல்லது நெய் சேர்த்து, சீரகம்,சின்ன வெங்காயம் தக்காளி (பொடியாக நறுக்கியது) சேர்த்து வதக்கவும்.

  4. 4

    இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

  5. 5

    பின்பு முருங்கை கீரை சேர்த்து நன்கு வதக்கி, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, குக்கரில் உள்ள பருப்பும் சேர்த்து நன்கு வேகவிடவும்.

  6. 6

    கடைசியாக தேங்காய், சோம்பு இரண்டையும் மிக்ஸியில் அரைத்து, வெந்து கொண்டிருக்கும் பருப்பு, கீரையில் சேர்த்து கொதிக்கவிடவும்.

  7. 7

    கடைசியாக எண்ணெயில், கடுகு, வற்றல் தாளிப்பு கொடுக்கவும்.

  8. 8

    இப்போது சுவையான, சத்தான பருப்பு, முருங்கை கீரை குழம்பு சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes