சிவப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  2. 4பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
  3. தேவையான அளவுஉப்பு
  4. ஒரு கப் தேங்காய் பூ
  5. தேவையான அளவுகருவேப்பிலை
  6. கால் டீஸ்பூன் சீரகம்
  7. ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பு
  8. அரை ஸ்பூன் கடுகு
  9. தேவையான அளவுஎண்ணெய்
  10. ஒன்றரைக் கப் தண்ணீர்
  11. 2 ஸ்பூன் நெய்
  12. தலா ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது

சமையல் குறிப்புகள்

  1. 1

    அவளை சுத்தம்செய்து வட சட்டியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும் ஆறிய பிறகு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு கடுகு கடலைப்பருப்பு சீரகம் அனைத்தையும் ஒன்றாக சேர்க்கவும் பாதி வணங்கி வந்த பிறகு பச்சை மிளகாய் சேர்க்கவும்

  3. 3

    இவை அனைத்தும் நன்கு வதங்கிய பிறகு வெங்காயத்தை கருவேப்பிலையும் சேர்க்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு தேங்காய் சேர்த்து நன்கு வறுக்கவும் ஒரு கப் அவளுக்கு ஒன்றரை கப் அளவு தண்ணீர் எடுத்து வறுத்த கலவையில் சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதி வரும் வரை மூடி வைக்கவும்

  4. 4

    தண்ணீர் கொதித்து வரும் பொழுது சிறிது சிறிதாக அவள் பொடிசெய்து துளை கொஞ்சம் கொஞ்சமாக கட்டி விடாமல் சேர்க்கவும் நன்கு கிளறி விட்டு அடுப்பை சிம்மில் வைத்து மூடிவைக்கவும் ஒரு நிமிடம் கழித்து கெட்டியாகும் வரை நன்கு வதக்கி விடவும் நெய் விட்டு மறுபடியும் கிளறவும்

  5. 5

    லேசாக ஆறிய பிறகு கையை தண்ணீரில் நனைத்துக்கொண்டு கொழுக்கட்டை போல பிடித்து பிடித்து இட்லி பாத்திரத்தில் வைக்கவும் சரியாக ஆறு நிமிடம் கழித்து இட்லி பாத்திரத்தை திறந்தால் வெந்திருக்கும் கொழுக்கட்டை இதற்கு தேங்காய் சட்னி சரியான காம்பினேஷன் இப்பொழுது சிவப்பு அவல் கார கொழுக்கட்டை ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736
அன்று

Similar Recipes