பள்ளிபாளையம் சிக்கன் (Pallipaalayam chicken recipe in tamil)

Uma Nagamuthu
Uma Nagamuthu @cook_22998513
Erode

ஆந்திர காரம் எல்லாம் கொஞ்சம் தொலைவில் நிற்க வைத்து விடும்.. நம்ம தமிழ் நாட்டு கார சார உணவுகள்.. அந்த வரிசையில் ஈரோடு ஸ்பெஷல் பள்ளிபாளையம் சிக்கன்... நமது கண், மூக்கில் இருந்து நீரை வர வைக்கும்.. சிக்கன் எவ்வளவோ அவ்வளவு காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்.. ஆனால் நான் கொஞ்சம் குறைவாக சேர்த்துள்ளேன்.. செம்ம காரம் and டேஸ்ட் ரெசிபி.வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்க்க தேவை இல்லை.. கறி மற்றும் காய்ந்த மிளகாய் மட்டுமே வைத்து செய்யும் ரெசிபி இது.. செய்து பார்த்து comments செய்யுங்கள் friends #arusuvai 2 ...(ஈரோடு ஸ்பெஷல்) very very spicy

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோசிக்கன்
  2. 150 கிராம்காய்ந்த மிளகாய்
  3. சிறிதுமஞ்சள் தூள்
  4. பட்டை
  5. அண்ணாச்சி பூ
  6. பிரிஞ்சி இலை
  7. கிராம்பு
  8. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் சிக்கன் சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.. பின் காய்ந்த மிளகாயை நடுவில் கீறி விதை நீக்கி வைத்து கொள்ளவும்.. விதைகள் வேறு ஒரு ரெசிபிக்கு பயன்படுத்தி கொள்ளவும், இதற்க்கு வேண்டாம்.. அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சற்று அதிகமாக ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, அண்ணாச்சி பூ போட்டு இலேசாக வதக்கவும்..

  2. 2

    பிறகு விதை நீக்கிய காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.. அதன் பிறகு சுத்தம் செய்து வைத்த சிக்கனை போட்டு நன்கு கிளறவும்..தண்ணீர் ஊற்ற வே‌ண்டா‌ம்.. கறி எண்ணெய் மற்றும் அதில் உள்ள தண்ணீரில் வேக வேண்டும்..

  3. 3

    நேரம் ஆக ஆக சிக்கன் நிறம் மாற ஆரம்பிக்கும்..அதற்கு பிறகு தான் உப்பு சேர்க்க வேண்டும்.. தேவைபடும் போது சிறிது தண்ணீர் தெளித்து தெளித்து வேக வைக்கவும்... கறியுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு கலந்து பார்க்கும் போதே கண்களுக்கு காரம் தெரியும்..

  4. 4

    எல்லாம் (கறி மற்றும் காய்ந்த மிளகாய்) நன்கு வெந்ததும் சரி பார்த்து இறக்கவும்...

  5. 5

    குறிப்பு: வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்க்க தேவை இல்லை.. கறி மற்றும் காய்ந்த மிளகாய் மட்டுமே வைத்து செய்யும் ரெசிபி இது..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Uma Nagamuthu
Uma Nagamuthu @cook_22998513
அன்று
Erode
I am happiest mother in the world
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Similar Recipes