சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி காய்ந்த நல்ல துணியில் துடைத்து கொள்ளவும். வெண்டைக்காயை காம்பு நீக்கி நான்காக பிளந்து அதை மிகவும் சிறியதாக அறிந்து கொள்ளவும். படத்தில் காட்டியுள்ளபடி அரிந்து கொள்ளவும். பெரிய வெங்காயத்தை மிகவும் பொடியாக அரிந்து கொள்ளவும். பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் சேர்த்துக் கொள்ளலாம். பச்சைமிளகாய் கலரும் வெண்டைக்காய் கலரும் ஒரே நிறமாக இருப்பதால் குழந்தைகள் சாப்பிட சிரமப்படுவார்கள். அதனால் வரமிளகாய் சேர்ப்பது நல்லது. வரமிளகாயை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் கடுகு சேர்த்து பொரியவிடவும்.பிறகு அரை ஸ்பூன் கடலைப் பருப்பு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 4 கிள்ளிய வரமிளகாய் சேர்த்து லேசாக சிவந்தவுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் வரமிளகாய்த்தூள் சேர்க்கவும். பிறகு வெண்டைக்காயை சேர்க்கவும். வெங்காயம் நன்கு வதக்கியபின் வெண்டைக்காய் சேர்த்தால் வழவழப்பு இருக்காது.
- 3
வெண்டைக்காயை நன்கு வதங்க விடவும். வாணலியை மூடி வைக்கக் கூடாது. மூடிவைத்து வேர்வை தண்ணீர் பட்டால் வெண்டைக்காய் குழகுழப்பு ஆகிவிடும். அதேபோல் வெண்டைக்காய் நன்கு வதங்கியவுடன் தூள் உப்பு சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்கு கலந்து விட்டு வெண்டைக்காய் நிறம் மாறும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- 4
இப்போது துருவிய தேங்காய் இரண்டு ஸ்பூன் தேவை என்றால் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றையும் நன்கு வதக்கிக் கொள்ளவும். கடைசியாக கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும். சுவையான வெண்டைக்காய் ஃப்ரை ரெடி. படத்தில் பிசைந்து சாப்பிட ரசம் சாதத்திற்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
Similar Recipes
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
வெண்டைக்காய் தீயல் (Vendaikkaai theeyal recipe in tamil)
#kerala நாங்கள் கேரளா முறையில் செய்தது இல்லை. இன்று செய்து பார்த்தேன் வித்தியாசமாகமும் கூடுதல் சுவையும் இருந்தது.மிகவும் அருமையாக உள்ளது அதை நீங்களும் செய்து பாருங்கள் தயா ரெசிப்பீஸ் -
-
-
வெண்டைக்காய் பொரியல்(ladys finger poriyal recipe in tamil)
எனது மகனுக்கு மிகவும் பிடித்தது இந்த மாதிரி செய்தால் கலர் பச்சையாகவே இருக்கும் டேஸ்ட் அருமையாக இருக்கும் Solidha -
காகாறகாய ஃப்ரை (Kakarakaya fry recipe in tamil)
#ap பாகற்காய் நீரிழிவு நோய்க்கு மிகவும் நல்லது... Raji Alan -
-
-
-
-
சௌசௌ பாசிப்பயிர் கூட்டு (Chow chow paasipayaru koottu recipe in tamil)
#goldenapron3/moong Meena Ramesh -
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
-
-
வெண்டைக்காய் பொரியல்
#bookவெண்டைக்காய் பொரியல் சாப்பிடுவதால் கணக்கு நன்றாக வரும் என்று ஒரு பழமை உண்டு அதனால் நாங்கள் வெண்டைக்காய் பொரியல் அடிக்கடி எங்கள் வீட்டில் செய்வோம் எனது மகனுக்கு வெண்டைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும். sobi dhana -
Spicy Raw Banana Fry#1/காரசாரமான வாழைக்காய் ஃப்ரை (Vaazhaikaai fry recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21#spicy#1 Shyamala Senthil -
வாழைப்பூ பொரியல் (vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
பொதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#nutrient3புதினாவில் எண்ணற்ற மினரல் விட்டமின் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. ஜீரணத்திற்கு மிக நல்ல உணவு. பைபர் சத்து 32% உள்ளது. விட்டமின் ஏ 84% உள்ளது விட்டமின் சி 52% உள்ளது இரும்பு சத்து 28% உள்ளது மற்றும் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது. எல்லா சத்துக்களும் நிறைந்த புதினாவை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
More Recipes
கமெண்ட் (3)