கருணைக்கிழங்கு தயிர் பச்சடி (Karunaikilanku thayir pachadi recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2பேர்
  1. 2சிறிய கருணை கிழங்கு
  2. 1கப் புளிக்காத கெட்டித் தயிர்
  3. 5சிறிய வெங்காயம்
  4. 2பச்சை மிளகாய்
  5. 2ஸ்பூன் துருவிய தேங்காய்
  6. 1ஸ்பூன் எண்ணெய்
  7. 1/2ஸ்பூன் கடுகு
  8. 1/4ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  9. 1/4 ஸ்பூன் பெருங்காயம் தூள்
  10. தூள் உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் இரண்டு சிறிய சைஸ் கருணைக் கிழங்கை தண்ணீரில் மண் போக கழுவி கொள்ளவும்.பிறகு அதை குக்கரில் (அல்லது) இட்லி பாத்திரத்தில் நன்கு வேக வைத்துக் கொள்ளவும். 5சிறிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும். இரண்டு பச்சை மிளகாயை பொடியாக அரிந்து கொள்ளவும். 2டீஸ்பூன் தேங்காய் துருவல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்து எண்ணெய் சூடான பிறகு அதில் அரை ஸ்பூன் கடுகு,1/4 ஸ்பூன்உளுத்தம்பருப்பு 1/4 ஸ்பூன்பெருங்காயத்தூள் சேர்த்து சிவந்தவுடன் அறிந்து வைத்த பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். இவற்றை புளிக்காத கெட்டித் தயிரில் சேர்த்துக் கொள்ளவும் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளவும்.. தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    மசித்த கருணை கிழங்கை அதில் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலந்து விடவும்அறிந்த கருவேப்பிலை கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறவும்.புளிக் குழம்பு சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். மேலும் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes