தண்டு பரமேனியம் (Thandu parameniyam recipe in tamil)

#arusuvai3
புளி சேர்க்காத வாழைதண்டு குழம்பு. மிகவும் சுவையாக இருக்கும். கொஞ்சம் காரம் சேர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்,இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். நீர்க்க வைக்க கூடாது. கொஞ்சம் கெட்டியாக வைக்க வேண்டும்.
தண்டு பரமேனியம் (Thandu parameniyam recipe in tamil)
#arusuvai3
புளி சேர்க்காத வாழைதண்டு குழம்பு. மிகவும் சுவையாக இருக்கும். கொஞ்சம் காரம் சேர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்,இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். நீர்க்க வைக்க கூடாது. கொஞ்சம் கெட்டியாக வைக்க வேண்டும்.
சமையல் குறிப்புகள்
- 1
நூறு கிராம் துவரம் பருப்பை இரண்டு டம்ளர் தண்ணீரில்,அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கால் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். வாழைத்தண்டை அரிசி கழுவிய தண்ணீரில் கொஞ்சம் மோர் அல்லது தயிர் சேர்த்து சன்னமாக நார் இல்லாமல் அறிந்து கொள்ளவும். மோர் சேர்ப்பதால் வாழைத்தண்டு கருத்துப் போகாது.
- 2
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு 12 பல் பூண்டை வாசம் வரும் வரை லேசாக வறுத்துக் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். வாழைத்தண்டை தண்ணீர் வடித்து விட்டு குக்கரில் அரை டம்ளர் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். ஒரு விசில் விட்டால் போதும். இப்போது வெந்த பருப்பை பூண்டுடன், வேக வைத்த தண்டுடன் சேர்த்து பூண்டு வேகும் வரை வேக விடவும்
- 3
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அதில் ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு, இரண்டு ஸ்பூன் கொத்தமல்லி, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு, 6 வரமிளகாய்,3சிறிய வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும். 1/2 கப் தேங்காய் துருவல் சேர்த்து எல்லாவற்றையும் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- 4
அரைத்த விழுதை, தண்டு பருப்பு கலவையில் சேர்த்து தேவை என்றால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கால் கப் பால் இப்போது சேர்க்கவும்.கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கிள்ளிய வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும். கொத்தமல்லி தழை கடைசியாக சேர்க்கவும்.
- 5
இப்போது தண்டு பரமேணியம் தயார். சாப்பாட்டிற்கு சுவையாக இருக்கும்.இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சௌசௌ கூட்டு(Chow Chow spicy gravy for rice and chappathi recipe in tamil)
சௌசௌ கூட்டு ஸ்பைசி பொருட்கள் சேர்த்து கிரேவி போல் செய்தேன் இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அதேசமயம் சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும். Meena Ramesh -
முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு
#bookஇன்று புளி சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டை செய்தேன். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் மோர் சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)
#made2எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பட்டை லவங்கம் கரம் மசாலா தூள் சேர்த்தும் செய்யலாம் .அவை இல்லாமல் புளி குழம்பு போலவும் வைக்கலாம்.மசாலா சேர்த்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். Meena Ramesh -
கொத்சு/Besan (Kothsu recipe in tamil)
#goldenapron3கொத்சு இட்லி தோசை, பூரி சப்பாத்தி போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். இது மசாலா செய்வதில் சிறிது வேறுபட்டது. கள்ள மாவு சேர்த்து செய்ய வேண்டும். Meena Ramesh -
கத்தரிக்காய் கூட்டு🍆🍆
#book கத்தரிக்காயில் செய்யப்படும் இந்த கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய அம்மாவின் ஃபேவரிட் ரெசிபி இது. எனக்கு பிடிக்கும் என்பதால் அடிக்கடி இதை எனக்கு செய்து கொடுப்பார். உப்பு நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் சாதம் மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். 😋😍 Meena Ramesh -
திடீர் தக்காளி சாம்பார்🍅 (Thideer thakkaali sambar recipe in tamil)
#arusuvai4எளிதாக மிக விரைவில் செய்து விட கூடிய சாம்பார். இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.செய்யும் போது தேவை என்றால் கசகசா மற்றும் பொட்டு கடலை சேர்த்து கொள்ளுங்கள்.நான் சேர்க்கவில்லை. Meena Ramesh -
தேங்காய் சேர்த்த தக்காளி சட்னி(tomato with coconut chutney recipe in tamil)
#cf4தக்காளி சட்னி பலவிதமாக செய்யலாம் கொஞ்சம் தேங்காய் சேர்த்து காரம் குறைவாக செய்து பார்த்தேன் இட்லிக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருந்தது Meena Ramesh -
பிந்தி மசாலா(Bindi masala recipe in tamil)
மிஸ்ஸிங் லெட்டர் லஞ்ச்எங்கள் வீட்டு இன்றைய லஞ்ச ஸ்பெஷல் , சப்பாத்தி, சாதம் ,காய்கறி சாலட், நாட்டுக் காய்கறிகளின் கலவை புளி குழம்பு, மற்றும் தயிர். இந்த வட இந்திய ஹிந்தி மசாலா சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் அதே சமயம் சாதத்தில் பிசைந்து சாப்பிட நம்ம ஊர் காரக் குழம்பு பேஸ்ட் உடன் இருக்கும்.type 2 lunch special Meena Ramesh -
கத்தரிக்காய் மோர் குழம்பு(brinjal mor kulambu recipe in tamil)
#cf5மோர்க் குழம்பில் கத்திரிக்காய் வேகவைத்து சேர்த்து மோர் குழம்பு வைத்தால் சுவையாக இருக்கும் மோர்க் குழம்பில் கத்திரிக்காய் சேர்த்து செய்துள்ளேன். Meena Ramesh -
பாகற்காய்,பச்சை சுண்டைக்காய், வெள்ளை கடலை வத்தக் குழம்பு..(vathal kulambu recipe in tamil)
இந்த வத்தக் குழம்பு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் ஏனென்றால் இதில் பாகற்காய் சுண்டைக்காய் கொண்டைக்கடலை மூன்றும் சேர்த்து இருப்பதால். இவை மூன்றுமே சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.எப்பொழுதும்போல் வறுத்து அரைத்து குழம்பில் சேர்த்து வத்த குழம்பு வைக்க வேண்டும். Meena Ramesh -
சேனை குழம்பு(yam curry recipe in tamil)
#ed1சேனை குழம்பு வெங்காய சாம்பார் சுட சாதத்தில் சூடாக ஊற்றி நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkangai Thol Thuvaiyal Recipe in Tamil)
#everyday2பீர்ககங்காய் தோலில் செய்யப்படும் துவையல்.இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
கத்தரிக்காய் சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
#Ga4கத்திரிக்காய் சட்னி இட்லி,தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். கத்திரிக்காயை சுட்டு பிறகு சட்னியாக அரைக்க வேண்டும். Meena Ramesh -
பாலைக்கீரை சாம்பார் (Palak keerai sambar recipe in tamil)
பாலைக்கீரையில் புளி இல்லாத சாம்பார் வைத்தால் சாப்பிட சுவையாக இருக்கும் #samberrasam Sundari Mani -
தட்டை பயறு மசாலா குழம்பு (Thattai payaru masala kulambu recipe in tamil)
#veஇந்த தட்டை பயிறு குழம்பு சாதத்திற்கும் சப்பாத்தி பூரிக்கும் சுவையாக இருக்கும். காராமணி பயறு தான் நாங்கள் தட்டைப்பயிறு என்று சொல்வோம். Meena Ramesh -
அரைத்துவிட்ட வெண் பூசணி சாம்பார்
#bookமதிய உணவிற்கு ஏற்ற சாம்பார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். என் மாமியாரின் ஸ்பெஷல் ரெசிபி.. என் மகனுக்கு மிகவும் பிடித்த சாம்பார். தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காயை அரைத்து விடுவதால் துவரம் பருப்பு குறைவாகத்தான் தேவைப்படும். Meena Ramesh -
Raw onion carrot raitha (Raw onion carrot raitha recipe in tamil)
#Pongalஇந்த தயிர் பச்சடி சாம்பார் சாதம், சப்பாத்தி, பிரியாணி, தக்காளி சாதம், பரோட்டா மற்றும் வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். என் மகனுக்கு மிகவும் பிடித்த தயிர் பச்சடி இது. புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். Meena Ramesh -
பிஸிபேளாபாத்/சாம்பார் சாதம் (Bhisibelabath Recipe in Tamil)
#nutrient2விட்டமின்கள் மற்றும் மினரல் சக்தி நிறைந்த காய்கறிகள் மற்றும் புரோட்டின் நிறைந்த பருப்பு, இவற்றின் கூட்டுக்கலவை இந்த சாம்பார் சாதம். சாம்பாராக செய்தாலும், காய்கறிகளில் பொரியல் செய்து கொடுத்தாலும் சாப்பிடமாட்டார்கள். இதுபோல் எல்லா காய்கறிகளையும் சேர்த்து சாம்பார் சாதம் செய்து கொடுத்தால் விரும்பி, பெரியவர் முதல் சிறியவர் வரை சாப்பிடுவார்கள்.துவரம் பருப்பில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. முருங்கைக்காயில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், சி கே, மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கால்சியம், ஜிங்க் நிறைந்துள்ளது. கேரட்டில் விட்டமின் ஏ செறிந்துள்ளது. மேலும் விட்டமின் பி6,கே பையோடின், பொட்டாசியம், போன்றவையும் உள்ளது. பீன்ஸில் பல விட்டமின்கள், காப்பர், போலேட், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் உள்ளது. தக்காளியில் விட்டமின் ஏ, சி, பி உள்ளது. பச்சை வேர்க்கடலையில் விட்டவன் பி6 உள்ளது. கருப்பு கொண்டை கடலையில் விட்டமின் ஏ பி 6, மற்றும் டி உள்ளது. Meena Ramesh -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
கிள்ளு வர மிளகாய் சாம்பார்🌶️(Killu varamilakaai sambar recipe in tamil)
#arusuvai2இந்த வகை சாம்பார், சாம்பார் தூள் அல்லது வரமிளகாய்த்தூள் சேர்க்காத சாம்பார் ஆகும். வரமிளகாய் கிள்ளி செய்யும் சாம்பார். சாப்பாட்டிற்கு சுவையாக இருக்கும். மோர் மிளகாய் இதற்கு தகுந்த ஜோடி. உருளைக்கிழங்கு வருவல், பொடிமாஸ் சேனைக்கிழங்கு சாப்ஸ் போன்றவை தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். அப்பளம், வடகம் போன்றவையும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
உருளைக்கிழங்கு முருங்கைக்காய் சாம்பார் (Urulaikilanku murunkaikaai sambar recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
முருங்கக்காய்,கத்தரிக்காய் மசாலா கூட்டு (Murunkaikaai, kathirikkaai masala kootu recipe in tamil)
#coconutஎனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல காரத்துடன் செய்து சுட சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் வாய்க்கு மிகவும் ருசியாக இருக்கும்.😋😛 Meena Ramesh -
-
இஞ்சி பச்சடி(inji pachadi recipe in tamil)
#ed3#இஞ்சிகல்யாண வீடுகளில் வைக்கப்படும் இஞ்சி பச்சடி இதை தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி போன்றவற்றுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதற்கு மாஇஞ்சி பயன்படுத்த வேண்டும். Meena Ramesh -
பாசிப்பருப்பு தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#m2021என் வீட்டில் உள்ள அனைவருக்கும் நான் செய்யும் இந்த பாசிப்பருப்பு தண்டு கூட்டு மிகவும் பிடிக்கும். தண்டு உடம்பிற்கு மிகவும் நல்லது. ஆனால் அதனை பொரியலாக செய்தால் யாரும் சாப்பிடுவதில்லை. இப்படி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள் ஆகவே இது எனக்கு memorable டிஷ் ஆகும். Gowri's kitchen -
உள்ளிபாயா பச்சடி 🍗 (Ulli paayaa pachadi recipe in tamil)
#apகேரள மக்கள் உணவில் காய்கறிகள் அதிகம் இருக்கும். ஆந்திரா மக்கள் உணவு வகைகள் மிகவும் காரசாரமாக இருக்கும். இந்திய மாநிலங்களில் மொழி,பண்பாடு, கலாச்சாரங்கள் மாறுபட்டு இருப்பது போலவே உணவு பழக்கங்களும் மாறுபட்டவை.ஆனாலும்,ஒவ்வொரு மாநில மக்களும் பிற மாநிலத்தவர் உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள்.உலகம் முழுவதிலும் நம் இந்தியர்களின் எல்லா உணவுகளும் பிரத்யோகமாக கிடைக்கும்.அந்த அளவிற்கு இந்தியரின் உணவு வகைகள்,பாரம்பரிய ருசி கொண்டவை. அதுவும் நம் தமிழ்நாடு ஒரு படி மேல். மாவட்டம் வாரியாக புகழ் பெற்ற உணவு வகைகள் உண்டு.திருநெல்வேலி,காரைக்குடி, கும்பகோணம் காஞ்சீபுரம் என்று சொல்லி கொண்டே போகலாம்.இட்லி,சாம்பார்,பொங்கல்,வடைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.ஆந்திரா கோங்குரா சட்னி,கேரள புட்டு_ கடலை குழம்பு,கர்நாடகா மைசூர் மசால் தோசை இப்படி சொல்லி கொண்டே போகலாம். Meena Ramesh -
மிளகாய் குழம்பு (Milakaai kulambu recipe in tamil)
#Arusuvai. காரசாரமான உணவுகள்.பச்சை மிளகாய் சிறிய வெங்காயம் பெரிய வெங்காயம் புளி போட்டு ஒரு குழம்பு வைப்போம் .இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
ஆந்திர ஸ்டைல் கேப்பேஜ் ப்ரை (Andhra style cabbage fry recipe in tamil)
#apகாரசாரமான முட்டை கோஸ் பொரியல் இது. ஆந்திரா ஸ்டைல் பொரியல்.சுவை நன்றாக இருந்தது.குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்றால் காரம் குறைவாக சேர்க்கவும். Meena Ramesh -
-
முப்பருப்பு முளைக் கீரை கூட்டு...💪(keerai with mixed dal koottu recipe in tamil)
துவரம்பருப்பு பாசிப்பருப்பு கடலைப்பருப்பு மூன்று பருப்புகளையும் சேர்த்து முளைக்கீரையை சேர்த்து செய்த கீரை கூட்டு. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கண்பார்வைக்கு மிக மிக நல்லது. கீரையிலுள்ள இரும்பு சத்தும் பருப்பில் உள்ள புரத சத்தும் நம் உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கும். Meena Ramesh
More Recipes
கமெண்ட் (5)