ஆந்திர ஸ்டைல் கேப்பேஜ் ப்ரை (Andhra style cabbage fry recipe in tamil)

#ap
காரசாரமான முட்டை கோஸ் பொரியல் இது. ஆந்திரா ஸ்டைல் பொரியல்.சுவை நன்றாக இருந்தது.குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்றால் காரம் குறைவாக சேர்க்கவும்.
ஆந்திர ஸ்டைல் கேப்பேஜ் ப்ரை (Andhra style cabbage fry recipe in tamil)
#ap
காரசாரமான முட்டை கோஸ் பொரியல் இது. ஆந்திரா ஸ்டைல் பொரியல்.சுவை நன்றாக இருந்தது.குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்றால் காரம் குறைவாக சேர்க்கவும்.
சமையல் குறிப்புகள்
- 1
முட்டை கோஸை பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். இதர தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
ஒரு நான் ஸ்டிக் கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம்,ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, கிள்ளிய இரண்டு வர மிளகாய் சேர்த்து சிவக்க வதக்கவும். பிறகு அதில் பொடியாக அரிந்த வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பாதிக்கு மேல் வதங்கிய உடன் பொடியாக அரிந்த முட்டைகோஸ் சேர்க்கவும். அதில் தேவையான அளவு தூள் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலந்து விடவும். 5 நிமிடம் வரை மூடிவைத்து ஆவியில் வேகவிடவும்.
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் அரைக் கப் தேங்காய் துருவல், 6 பச்சை மிளகாய், 5 அல்லது 6 பல் பூண்டு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். ஐந்து நிமிடம் முட்டைகோஸ் வெந்தவுடன் தேங்காய் விழுதை முட்டைக்கோஸில் சேர்த்து நன்கு கலந்து விடவும். மீண்டும் 5 நிமிடம் மூடி வைத்து வேக விடவும். நான் ஸ்டிக் தவா என்பதால் தண்ணீர் தெளிக்க தேவையில்லை.சாதாரண வாணலி என்றால் லேசாக தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்.
- 4
நன்றாக கலந்த பின் பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழையை தூவி இறக்கவும். சூப்பரான ஆந்திரா ஸ்பெஷல் முட்டைக்கோஸ் பொரியல் தயார். காரம் அவரவர் தேவைக்கு ஏற்ப மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம், மோர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தொண்ட காய வேப்புடு/ கோவைக்காய் ஃபிரை (Kovaikkai fry recipe in tamil)
#apஆந்திரா சமையலில் கோவைக்காய் மிகவும் முக்கியமான உணவாகும்.இன்று கோவைக்காய் ப்ரை செய்துள்ளேன்.வேர்க்கடலையை உப்பு காரம் சேர்த்து தனியாக வறுத்து இந்த காயில் கலந்து செய்தேன். ச. காயுடன் வேர்கடலை கடிபட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருந்தது. Meena Ramesh -
ஆந்திரா உள்ளி காரம் தோசை (Andhra ulli kaaram dosai recipe in tamil)
#ap ஆந்திராவில் ஃபேமஸான உணவு உள்ளி காரம் தோசை. மிகவும் காரசாரமான ஒரு உணவு. சீஸ் துருவல் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் Laxmi Kailash -
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai koottu recipe in tamil)
#Kerala #photoகேரளாவில் காய்கறி கூட்டு வகைகள் மிகவும் பிரபலம்.நம்மைப் போல் அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட மாட்டார்கள் பெரும்பாலும் தேங்காய் சீரகம் மிளகாய் அரைத்து கூட்டாக செய்து சாப்பிடுவார்கள். Meena Ramesh -
பேண்டக்காய் வேர்சேனகலு பப்பு காரம் (Bendakkaai versenakalu pappu kaaram recipe in tamil)
#ap பேண்டக்காய் (வெண்டைக்காய்) நிலகடலை காரம். ஆந்திராவில் இது ஒரு ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல். மிகவும் சுவையாக இருக்கும் செய்து பார்க்கவும். Siva Sankari -
வடியாலா வங்காய் புலுசு (Vatiyala vankaya pulusu recipe in tamil)
#ap வடகம் கத்தரிக்காய் புளிக்குழம்பு ஆந்திரா ஸ்டைல் Siva Sankari -
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
ஆந்திர பப்பு சாம்பார் (Andhra pappu sambar recipe in tamil)
#ap.. நம்ம ஊரிலே சாம்பார் எவ்ளவு பிரதானமோ அதேபோல் ஆந்திரா சாம்பாரும் அவர்களுக்கு பிரதானமானது . காரம் தூக்கலாக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.. Nalini Shankar -
ஆந்திர பருப்பு பொடி (Andhra paruppu podi recipe in tamil)
#ap... ஆந்திராவில் சாதத்துடன் பருப்பொடி, நெய் கலந்து சாப்பிடுவது வழக்கம்... அதேபோல் அங்கே சாப்பாடும் காரமானதாக இருக்கும்... காரசாரமான ஆந்திர பருப்புப்பொடி செய்முறை... Nalini Shankar -
பொட்லகாய பெருகு பச்சடி (Snake Gourd curd pachhadi) (Potlakaya peruku pachadi recipe in tamil)
ஆந்திரா ஸ்டைல் இந்த பொட்லகாய பெருகு பச்சடி மிகவும் சுவையாக உள்ளது. செய்வது மிகவும் சுலபம்.#ap Renukabala -
-
குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
குண்டூர் இட்லி பொடி மிகவும் சுவையாக இருக்கும் ஆந்திரா ஸ்டைல் பொடி. இது பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து செய்யக்கூடியது.#ap Renukabala -
காரசார கேரட் வறுவல்(Spicy carrot fry recipe in tamil)
#ap ஆந்தரா ஸ்டைல் காரசாரமான கேரட் வறுவல். கேரட் பிடிக்காதவர்களுக்குக்கூட இப்படி செய்து கொடுத்தால் பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)
இந்த ஆந்திரா ஸ்டைல் காலிஃபி ளவர் வேப்புடு வித்யாசமான சுவையுடன், நல்லா மசாலா மணத்துடன் இருக்கும்.#ap Renukabala -
முருங்கக்காய்,கத்தரிக்காய் மசாலா கூட்டு (Murunkaikaai, kathirikkaai masala kootu recipe in tamil)
#coconutஎனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல காரத்துடன் செய்து சுட சாதத்தில் நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் வாய்க்கு மிகவும் ருசியாக இருக்கும்.😋😛 Meena Ramesh -
பொட்லகாய வேப்புடு காரம் (snake gourd spicy fry) (Potlakaaya veppudu kaaram recipe in tamil)
ஆந்திரா ஸ்டைல் பொட்டலகாய வேப்புடு என்பது நம் புடலங்காய் பொரியல் தான். இந்த பொட்டலகாய வேப்புடு மிகவும் சுவையாக இருக்கும். இதில் தேங்காய் ஏதும் சேர்ப்பதில்லை. பதிலாக வறுத்த எள்ளுப்பொடி சேர்க்கப்பட்டுள்ளது.#ap Renukabala -
பர்ப்பிள் கேப்பேஜ் வதக்கல் (Purple cabbage fry) (Purple cabbage fry recipe in tamil)
இந்த பர்ப்பிள் கேப்பேஜ் மிகவும் சத்துக்கள் நிறைத்தது. வயிறுஉப்புசம், அஜீரணம், கேன்சர், இதயம் சார்ந்த எல்லா நோய்களையும் கட்டுப்படுத்தும். புரதம், வைட்டமின் சத்துக்களும் இதில் உள்ளது. சாலட், பொரியல் எல்லாம் செய்து சுவைக்கலாம். Renukabala -
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளிகார தோசை (Andhra special ulli kaara dosai recipe in tamil)
#apஇது ஆந்திரா பேமஸ். மிகவும் காரசாரமான ஒரு காலை உணவு இது விரைவில் செய்யக்கூடிய ஒரு உணவு. Lakshmi -
கொத்சு/Besan (Kothsu recipe in tamil)
#goldenapron3கொத்சு இட்லி தோசை, பூரி சப்பாத்தி போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். இது மசாலா செய்வதில் சிறிது வேறுபட்டது. கள்ள மாவு சேர்த்து செய்ய வேண்டும். Meena Ramesh -
சீரக முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)
#CF4 முட்டை பொரியல்.இது உடலுக்கு மிகவும் நல்லது. இது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். தயா ரெசிப்பீஸ் -
கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil)
#kp இந்த பொரியல் நிறைய கல்யாண வீடுகளில் செய்வார்கள் அது மட்டுமில்லாமல் சில ஓட்டல்களிலும் இது போல் செய்வார்கள்.. Muniswari G -
ஒரளு சித்திரன்னம்/ bhramin style (Oralu chithrannam recipe in tamil)
#karnatakaவெங்காயம் பூண்டு சேர்க்காத பிராமின் ஸ்டைல் சித்திரவனம். நம்மூர் கொத்தமல்லி சாதம். Meena Ramesh -
தண்டு பரமேனியம் (Thandu parameniyam recipe in tamil)
#arusuvai3புளி சேர்க்காத வாழைதண்டு குழம்பு. மிகவும் சுவையாக இருக்கும். கொஞ்சம் காரம் சேர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்,இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். நீர்க்க வைக்க கூடாது. கொஞ்சம் கெட்டியாக வைக்க வேண்டும். Meena Ramesh -
-
தேங்காய் சேர்த்த தக்காளி சட்னி(tomato with coconut chutney recipe in tamil)
#cf4தக்காளி சட்னி பலவிதமாக செய்யலாம் கொஞ்சம் தேங்காய் சேர்த்து காரம் குறைவாக செய்து பார்த்தேன் இட்லிக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருந்தது Meena Ramesh -
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
உடனடி தக்காளி ஊறுகாய் (ஆந்திரா ஸ்டைல்)(Ready made Tomato pickle Andhra style recipe in Tamil)
#ap* ஆந்திரா மாநிலத்தில் செய்யப்படும் திடீர் ஊறுகாய் என்றே கூறலாம்.*இதை இட்லி,தோசை மற்றும் அனைத்து விதமான சாதங்களுக்கும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். kavi murali
More Recipes
கமெண்ட்