பாவ் பஜ்ஜி (Pav bajji recipe in tamil)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

பாவ் பஜ்ஜி (Pav bajji recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2உருளைக்கிழங்கு
  2. 1/2கப் பச்சை பட்டாணி
  3. 1/2கப் காளிஃபிளவர்
  4. 2 கேரட்
  5. 1 வெங்காயம்
  6. 1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  7. 2 தக்காளி
  8. 2குடை மிளகாய்
  9. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  10. 1/2ஸ்பூன் மல்லி தூள்
  11. 1ஸ்பூன் சீரகத்தூள்
  12. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  13. 1ஸ்பூன் பாவ் பஜ்ஜி மசாலா
  14. 1ஸ்பூன் எலுமிச்சை சாறு
  15. உப்பு தேவைக்கு
  16. 2 ஸ்பூன் எண்ணெய்
  17. 2 ஸ்பூன் பட்டர்
  18. கொத்த மல்லி சிறிது
  19. 8 பாவ் பன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அனைத்து காய்களையும் நன்றாக கழுவி பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் நறுக்கிய காய்கள் அனைத்தையும் குக்கரில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 4விசில் வரும் வரை வேக விடவும். பின்னர் குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கரை திறந்து காய்களை நன்றாக மசிக்கவும்.

  2. 2

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் மற்றும் பட்டர் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய குடை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.

  3. 3

    பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகத்தூள் மற்றும் பாவ் பஜ்ஜி மசாலா சேர்த்து 1நிமிடம் வதக்கவும். பின் 1/2கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து 3நிமிடம் கொதிக்க விடவும். பின் வேக வைத்து மசித்து வைத்துள்ள காய்களை சேர்த்து கிளறவும். அதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின்னர் 5நிமிடம் வரை மிதமான தீயில் கொதிக்க வைத்து பின் பொடியாக நறுக்கிய கொத்த மல்லி தூவி இறக்கவும்.

  4. 4

    பின்னர் ஒரு தோசை கல்லில் சிறிது பட்டர் சேர்த்து சூடானதும் அதில் சிட்டிகை பாவ் பஜ்ஜி மசாலா சேர்த்து அதன் மேல் நறுக்கிய பன்னை வைத்து இருபுறமும் 1நிமிடம் சூடு படுத்தவும். பின்னர் பன்னுடன் பாவ் பஜ்ஜி மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம், சிறு துண்டு எலுமிச்சை, மற்றும் மசாலாவின் மேல் சிறிது பட்டர் சேர்த்து பரிமாறவும். சுவையான ஆரோக்கியமான பாவ் பஜ்ஜி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Manjula Sivakumar
அன்று

Similar Recipes