வெங்காய கச்சோரி (Venkaaya kachori recipe in tamil)_

Aishwarya Veerakesari
Aishwarya Veerakesari @laya0431

வெங்காய கச்சோரி (Venkaaya kachori recipe in tamil)_

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் மைதா மாவு
  2. 1 மே.க ரவை
  3. 2 தே.க நெய்
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. 1/2 மே.க சீரகம்
  7. 1/2 மே.க சோம்பு
  8. 1/2மே.க கொத்தமல்லி விதை
  9. 1 பச்சை மிளகாய்
  10. 1/2 மே.க துருவிய இஞ்சி
  11. 2 வெங்காயம்
  12. 1/4 மே.க மஞ்சள்தூள்
  13. 1/2 மே.க மிளகாய்த்தூள்
  14. 1/2 மே.க கரம் மசாலா தூள்
  15. 1/4 மே.க சர்க்கரை
  16. 1/2 மே.க ஆம்சூர் பவுடர்
  17. 1/4 கப் கடலை மாவு
  18. கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் மைதா மாவு,ரவை,நெய்,உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் பின்னர் தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்...20 நிமிடங்கள் ஊற வைக்கவும்...

  2. 2

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம்,சோம்பு,இடித்த கொத்தமல்லி விதை, துருவிய இஞ்சி,பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்...

  3. 3

    பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க கூடாது..

  4. 4

    பின்னர் மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு,கரம் மசாலா தூள்,சர்க்கரை, ஆம்சூர் பவுடர் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்... பிறகு கடலைமாவு,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு வதக்கி அடுப்பை அணைக்கவும்....

  5. 5

    பிறகு மைதா மாவை பெரிய உருண்டையாக உருட்டி கொள்ளவும்.... பின்னர் உருண்டையை தட்டி கொள்ளவும்... பிறகு நடுவில் வெங்காய கலவையை வைத்து உருண்டையாக உருட்டி கொள்ளவும்.... பின்னர் அதனை சமமாக மொத்தமாக தேய்த்தோ அல்லது கையால் தட்டி கொள்ளவும்...

  6. 6

    பிறகு எண்ணெயில் போட்டு இரு புறமும் நன்கு பொன்னிறமாக மிதமான தீயில் வேக வைக்கவும்...

  7. 7

    சுவையான வெங்காய கச்சோரி தயார்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes