எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6 பரிமாறுவது
  1. ஒரு கட்டு வெந்தயக் கீரை
  2. 1/4கிலோ உருளைக்கிழங்கு
  3. 1குழிக்கரண்டி எண்ணெய்
  4. 2பெரிய வெங்காயம்
  5. 4தக்காளி
  6. 3ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1 1/2ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 1/2 ஸ்பூன் கறிமசாலா தூள்
  9. 1துண்டு பட்டை
  10. 4 கிராம்பு
  11. 2 ஏலக்காய்
  12. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு அதன் பின் வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்வோம். அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, சுத்தம் செய்து வெட்டி வைத்த வெந்தயக்கீரையை சேர்த்துக் கொள்வோம்.

  2. 2

    கீரை வதங்கியவுடன் அரைத்த தக்காளியை சேர்த்துக் கொள்வோம்.அதில் மிளகாய்த்தூள், கறிமசால் தூள்,தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கிளறி,வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கையும்,தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் வெந்தயக்கீரை குழம்பு தயார். சுவையாக இருக்கும். கசப்பே தெரியாது. செய்துதான் பாருங்களேன்👌 😉 🤤😋👌🍛🍛👌😋😋🤤🤤

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes