பாவக்காய் பராத்தா (Paakarkaai paratha recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

பாவக்காய் பராத்தா (Paakarkaai paratha recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1கப் கோதுமை மாவு
  2. 1 டேபிள் ஸ்பூன்பொடியாக நறுக்கின பாவக்காய்
  3. 2 டேபிள் ஸ்பூன்பொடியாக நறுக்கின வெங்காயம்,
  4. 1 பச்சைமிளகாய்,
  5. மல்லி இலை, கருவேப்பிலை கொஞ்சம்
  6. 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்,
  7. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்,
  8. 1டீஸ்பூன் உப்பு (உப்பு, காரம்தேவைக்கேற்ப)
  9. 1/2 ஸ்பூன் ஜீரகம்
  10. 1டேபிள் ஸ்பூன் எண்ணெய் or நெய்

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    அடுப்பில் வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு ஜீரகம் போட்டு வெடிச்சததும் கேரட் துருவலில் துருவிய பாவக்காய் போட்டு நன்றாக வதக்கவும். (கசப்பு குறைஞ்சுடும்).

  2. 2

    வதங்கினதும் அடுப்பிலிடுந்து கீழே இறக்கி ஆறவிடவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், பாவக்காய், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு கொத்தமல்லி, கருவேப்பிலை போட்டு நன்றாக கிளறவும்.

  4. 4

    அதில கோதுமை மாவு, எண்ணெய் விட்டு நன்றாக கலந்து விட்டு, தேவைக்கேற்ப தண்ணி விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.

  5. 5

    சப்பாத்தி கட்டையில் கொஞ்சம் மாவு எடுத்து சப்பாத்தி பரத்தவும்.அடுப்பில் தவா வைத்து சப்பாத்தி சுட்டெடுக்கவும் எண்ணெய், நெய் விருப்பம்போல் விட்டுக்கவும்

  6. 6

    சுவையான பாவக்காய் பராத்தா ரெடி.. மேத்தி பராத்தா போலவே ருசியாக இருக்கும் இதை
    வெங்காய ரைத்தா உடன் பரிமாறவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes