எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப் வெந்தய கீரை
  2. 2கப் கோதுமை மாவு
  3. 1/4கப் கடலை மாவு
  4. உப்பு
  5. 1ஸ்பூன் பச்சை மிளகாய் இஞ்சி விழுது
  6. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1ஸ்பூன் வெள்ளை எள்ளு
  9. பால் தேவைக்கு
  10. எண்ணெய் தேவைக்கு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, பச்சை மிளகாய் இஞ்சி விழுது, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் வெந்தய கீரை ஆகியவற்றை கலந்து கொள்ளவும். பின்னர் வெள்ளை எள்ளு சேர்த்து கலந்து கொள்ளவும்.

  2. 2

    பின்னர் காய்ச்சி ஆறிய பாலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும். (தண்ணீர் சேர்க்க கூடாது). சிறிது எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக மெலிதாக தேய்த்து சூடான தோசைக்கல்லில் போட்டு இரு புறமும் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

  4. 4

    சுவையான குஜராத்தி மேத்தி தேப்லா ரெடி. காரமான ஊறுகாய் அல்லது கெட்டி தயிருடன் பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manjula Sivakumar
அன்று

Similar Recipes