எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. ஒரு கப் பச்சைசுண்டைக்காய்
  2. 10 சின்ன வெங்காயம்
  3. எலுமிச்சை அளவுபுளி
  4. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள் 22/200 35/200
  5. 3ஸ்பூன் சாம்பார் தூள் 22/200 35/200
  6. உப்பு தேவையான அளவு 18/200 31/200
  7. 4ஸ்பூன் நல்லெண்ணெய்
  8. 1 கரண்டி வேக வைத்த துவரம் பருப்பு
  9. அரைத்துக் கொள்ள;
  10. அரை கப் தேங்காய்
  11. ஒரு துண்டு இஞ்சி
  12. 4 பல் பூண்டு
  13. 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  14. ஒரு ஸ்பூன் கடலைப்பருப்ப
  15. 1,1/2 ஸ்பூன் வர கொத்தமல்லி
  16. 1/2 ஸ்பூன் வெந்தயம்
  17. 1/2 ஸ்பூன் சீரகம் 17/200 30/200
  18. 1/4 ஸ்பூன் மிளகு 16/200 29/200
  19. 3 வர மிளகாய் 12/200 25/200
  20. 2 ஸ்பூன் சர்க்கரை அல்லது வெல்லம்
  21. தாளிக்க 7/200 19/200
  22. ஒரு ஸ்பூன் எண்ணெய் 18/200 31/200
  23. ஒரு ஸ்பூன் கடுகு 16/200 29/200
  24. ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு 27/200 40/200
  25. வர மிளகாய் 10/200 23/200
  26. அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் 26/200 39/200
  27. கறிவேப்பிலை சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கப் சுண்டைக்காய் எடுத்துக் கொள்ளவும். பத்து சிறிய வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக அறிந்து கொள்ளவும்.3 வரமிளகாய், அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பு,1,1/2 டீஸ்பூன் வரகொத்தமல்லி,அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் வெந்தயம், கால் ஸ்பூன் மிளகு எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    அரைக்க தேங்காய் எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சைப்பழ அளவு புளியை ஊறவைத்துக் கொள்ளவும்.ஒரு ஸ்பூன் எண்ணெயில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வரக்கொத்தமல்லி சீரகம் மிளகு வெந்தயம் வரமிளகாய் இவற்றை வறுத்து கொள்ளவும் இவற்றுடன் 4 பல் பூண்டு, இஞ்சி 1 துண்டு சேர்த்து வதக்கவும். தேங்காய் சேர்த்து வறுத்த இந்த பொருட்களை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    படத்தில் காட்டியுள்ளபடி அம்மியில் சுண்டைக்காயை தட்டிக் கொள்ளவும். அல்லது மிக்ஸியில் ஒன்றிரண்டாக ஒட்டிக் கொள்ளவும். விதை போக நன்கு கழுவிக் கொள்ளவும். ஒரு வாணலியில்3 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு உளுத்தம் பருப்பு,வரமிளகாய், பெருங்காயத்தூள் கறிவேப்பிலை தாளித்து தட்டிய சுண்டைக்காயை சேர்த்து 3 நிமிடங்கள்வதக்கிக் கொள்ளவும். பிறகு அதனுடன் அரிந்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

  4. 4

    வதங்கிய சுண்டை காயுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், 3ஸ்பூன் மிளகாய்தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து மீண்டும் வதக்கிக் கொள்ளவும். தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 சவுண்டு விட்டு வேகவிடவும். சுண்டைக் காய் வெந்தவுடன் வேக வைத்த துவரம்பருப்பை ஒரு கரண்டி சேர்த்து கொள்ளவும்.பிறகு கரைத்து வைத்த புளி தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும்.

  5. 5

    இப்போது அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும். கடைசியில் வெல்லம் அல்லது சர்க்கரை தேவையான அளவு கலந்து கொள்ளவும்.

  6. 6

    சுவையான பச்சை சுண்டைக்காய் குழம்பு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (2)

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes