மசாலா கடலை (masala chenna receip in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

இது ஒரு மாலை நேர ஸ்னாக்ஸ்.
சின்ன ஹோட்டல், தள்ளு வண்டி எல்லா இடத்திலும் கிடைக்கும். நீங்களும் வீட்டிலேயே செய்திட இந்த பதிவு.
#hotel

மசாலா கடலை (masala chenna receip in tamil)

இது ஒரு மாலை நேர ஸ்னாக்ஸ்.
சின்ன ஹோட்டல், தள்ளு வண்டி எல்லா இடத்திலும் கிடைக்கும். நீங்களும் வீட்டிலேயே செய்திட இந்த பதிவு.
#hotel

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3பேர்
  1. 250 கிராம் வெள்ளை கடலை (சிறியது)
  2. 2 வற்றல் மிளகாய்
  3. 1 டீஸ்பூன் சீரகம்
  4. 4 பல் பூண்டு
  5. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள்
  7. தேவையான அளவுஉப்பு
  8. தாளிக்க :
  9. 1டேபிள் ஸ்பூன் எண்ணை
  10. 1/4டீஸ்பூன் கடுகு, உளுந்து
  11. சிறிதுகறிவேப்பிலை
  12. அலங்கரிக்க:
  13. 1டேபிள் ஸ்பூன் மல்லி இலை
  14. 1டீஸ்பூன் எலுமிச்சை சாறு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    கடலையை நன்கு கழுவி, தண்ணீர் சேர்த்து எட்டு மணி நேரம் ஊறவைத்து, ஊறிய தண்ணீரை வடித்துவிட்டு, வேறு தண்ணீர் சேர்த்து குக்கரில் ஐந்து விசில் விட்டு எடுக்கவும்.

  2. 2

    மிக்ஸியில் வற்றல் மிளகாய், பூண்டு, சீரகம், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

  3. 3

    வாணலியில் எண்ணை சேர்த்து சூடானதும் கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்ந்து வைத்தவும்.

  4. 4

    வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

  5. 5

    பின்பு வேகவைத்துள்ள கடலை,உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கி, எலுமிச்சை சாறு கலந்து மல்லி இலை தூவிட சுவையான மசாலா கடலை சுவைக்கத்தயார்.

  6. 6

    வெளியில் போய் சாப்பிடும் இந்த உணவுகளை வீட்டிலேயே தயார் செய்து சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட் (7)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Enakku ithu romba pidikkum..beach kku pokumbothu vangi sappiduven..

Similar Recipes