தேவையான பொருட்கள்

  1. 2 பாக்கெட் திணை சேமியா
  2. 2 வெங்காயம்
  3. 1 கேரட்
  4. கருவேப்பிலை
  5. மல்லி தழை
  6. 3 வர மிளகாய்
  7. 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  8. 1/2ஸ்பூன் கடுகு
  9. 1ஸ்பூன் கடலை பருப்பு
  10. 1ஸ்பூன் உளுந்து பருப்பு
  11. எண்ணெய்
  12. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு அதில் திணை சேமியாவை 2 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    பின் இட்லி தட்டில் அல்லது ஓட்டை கிண்ணத்தில் துணி போட்டி அதில் வைத்து 8 நிமிடம் வேக வைக்கவும்.

  3. 3

    பிறகு உதிர்த்தி ஆற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு உளுந்து பருப்பு கறிவேப்பிலை மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பிறகு கேரட் உப்பு சேர்த்து வதக்கி பின் ஆற வைத்த திணை சேமியாவை போட்டு கிளறவும். கடைசியாக எலுமிச்சை சாற்றை பிழிந்து மல்லி தழை தூவி கிளறி இறக்கவும். ஹெல்த்தியான திணை சேமியா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes