தேவையான பொருட்கள்

120நிமிடங்கள்
3பேர்
  1. 400 கிராம் ராகி சேமியா
  2. 1/2கப்தேங்காய் துருவல்
  3. 1/4கப் சர்க்கரை
  4. 1/2 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  5. ஒரு பெரிய வெங்காயம்
  6. 2 பச்சை மிளகாய்
  7. 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு
  8. 1/2 டீஸ்பூன் கடுகு
  9. 1 கொத்து கறிவேப்பிலை
  10. சிறிதுகொத்தமல்லி இலை
  11. 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  12. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

120நிமிடங்கள்
  1. 1

    முதலில் ராகி சேமியாவை சிறிது உப்பு கலந்த நீரில் ஒரு நிமிடம் ஊற வைத்து அலசி எடுத்துக்கொள்ளவும். பின் அதனை இட்லி பாத்திரத்தில் வைத்து 5 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதனை இரண்டு பாதியாக பிரித்து வைக்கவும். முதல் பாதியில் துருவிய தேங்காய் ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து தேவைப்பட்டால் சிறிது நெய் சேர்த்து கலந்து பரிமாறவும் இனிப்பு சேமியா தயார்.

  2. 2

    கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து அதன்பின் நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கிய உடன் மீதமுள்ள ராகி சேமியாவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும் இறுதியாக எலுமிச்சை சாறு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி 5 நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைத்து வேக வைக்கவும் சுவையான சேமியா தயார்.

  3. 3

    ராகியில் செய்யக் கூடிய இனிப்பு மற்றும் கார சேமியா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sanas Lifestyle (SaranyaElamparuthi)
அன்று
Dharmapuri

Similar Recipes