சாம்பார் சாதம் (Sambar saatham recipe in tamil)

Thulasi
Thulasi @cook_9494
Virudhunagar

சாம்பார் சாதம் (Sambar saatham recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
6 நபர்
  1. சாதம் வைக்க:
  2. 3/4கப் அரிசி
  3. 1/2 கப் துவரம் பருப்பு
  4. 4 கப் தண்ணீர்
  5. மசாலா பவுடர்:
  6. 1 டீஸ்பூன் எண்ணெய்
  7. 1 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  8. 1 டேபிள்ஸ்பூன் மல்லிவிதை
  9. 2 டீஸ்பூன் மிளகு
  10. 1 டீஸ்பூன் உளுந்து
  11. 1 டீஸ்பூன் சீரகம்
  12. 1 டீஸ்பூன் சோம்பு
  13. 4 மிளகாய் வத்தல்
  14. 5காஷ்மீரி சில்லி
  15. 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய்
  16. சாம்பார் சாதம்:
  17. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  18. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  19. 1/4 டீஸ்பூன் பெருங்காயம்
  20. 2 பச்சை மிளகாய்
  21. 10-12 சின்ன வெங்காயம்
  22. 4 கப் காய்கறிகள்
  23. 2 தக்காளி
  24. 2 கப் தண்ணீர்
  25. எலுமிச்சை அளவுபுளி
  26. உப்பு
  27. தாளிக்க:
  28. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  29. 1/8 டீஸ்பூன் வெந்தயம்
  30. 1/8 டீஸ்பூன் கடுகு
  31. 3 வத்தல்
  32. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    குக்கரில் நன்கு அலசிய அரிசி பருப்பு தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் 4 விசில் வரும் வரை வேகவிடவும்.

  2. 2

    மசாலா பவுடர் செய்ய: கடாயில் எண்ணெய் சூடு ஏறியதும் கடலைப்பருப்பு மல்லி மிளகு உளுந்து சீரகம் பெருஞ்சீரகம் வத்தல் காஷ்மீரி மிளகாய் தேங்காய் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கி சூடு ஆறியதும் மிக்ஸியில் பவுடர் ஆக்கவும்.

  3. 3

    சாம்பார் சாதம் செய்ய: குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் மஞ்சள் தூள் பெருங்காயம் சேர்த்து அத்துடன் பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் காய்கறி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.

  4. 4

    நன்கு வதங்கிய பின் நாம் அரைத்து வைத்த மசாலா பவுடர் சேர்த்து அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின் புளித்தண்ணிர் உப்பு சேர்த்து அத்துடன் வேக வைத்த சாதம் கட்டி சேராமல் நன்கு நன்கு பிரட்டி 5 நிமிடம் மூடி வைக்கவும்.

  5. 5

    தாளிக்க: கடாயில் நெய் சூடேறியதும் கடுகு வெந்தயம் வத்தல் கருவேப்பிலை தாளித்து சாதத்தில் ஊற்றவும். சுவையான சாம்பார் சாதம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Thulasi
Thulasi @cook_9494
அன்று
Virudhunagar
My Instagram ID @thulasi_siva8994
மேலும் படிக்க

Similar Recipes