எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2கிலோ சிக்கன்
  2. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  3. 2டேபிள்ஸ்பூன் தயிர்
  4. 1நறுக்கிய வெங்காயம்
  5. 1நறுக்கிய தக்காளி
  6. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. கொத்தமல்லி
  8. 1 டீஸ்பூன் கரம் மசாலா
  9. கறிவேப்பிலை
  10. மசாலா
  11. 1டேபிள்ஸ்பூன் தனியா
  12. 5-7 வரமிளகாய்
  13. 1/2டீஸ்பூன் சோம்பு
  14. 1 பட்டை
  15. 2 லவங்கம்
  16. 2 ஏலங்காய்
  17. 1/4டீஸ்பூன் ஜதிக்காய்
  18. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சிக்கனை நன்றாக கழுவி இதனுடன் மஞ்சள் தூள் தயிர் சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்

  2. 2

    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் கரம்மசாலா நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பிறகு இதில் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்றாக வதக்கவும்

  3. 3

    பிறகு அதில் சிக்கனை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும்

  4. 4

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து ஆறிய பின் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்

  5. 5

    அரைத்த மசாலாவை சிக்கனுடன் சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும் பிறகு இதில் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி கருவேப்பிலை தூவி மூடி 20 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும் தண்ணீர் விடத் தேவையில்லை சிக்கனில் இருந்து வரும் தண்ணீர் போதுமானதாக இருக்கும்

  6. 6

    சிக்கன் வெந்தவுடன் இதில் மிளகுத்தூள் கொத்தமல்லி இலை தூவி ஒரு முறை கிளறி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes