மட்டன் பிரியாணி

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

மட்டன் பிரியாணி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4-6 பரிமாறுவது
  1. 1/2கிலோ மட்டன்
  2. 1/2கிலோ சீரக சம்பா அரிசி (2கப்) 20நிமிடம் ஊற வைக்கவும்
  3. 2நறுக்கிய வெங்காயம்
  4. 20 சின்ன வெங்காயம் (அரைத்துக்கொள்ளவும்)
  5. 2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 2நறுக்கிய தக்காளி
  7. 2பச்சை மிளகாய், 1 கைப்பிடி புதினா, கொத்தமல்லி (கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்)
  8. 3/4டீஸ்பூன் மிளகாய் தூள்
  9. 3/4டீஸ்பூன் மட்டன் மசாலா
  10. 1/2டீஸ்பூன் கரம் மசாலா
  11. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 3டேபிள்ஸ்பூன் தயிர்
  13. 1 பட்டை
  14. 3 லவங்கம்
  15. 4 ஏலங்காய்
  16. 1/2 எலுமிச்சை சாறு
  17. 3டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  18. 3டேபிள்ஸ்பூன் நெய்
  19. உப்பு
  20. 1000மிலி தண்ணீர்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    பிரியாணி சட்டியை எண்ணெயை ஊற்றி சூடேற்றி அதில் பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்க்கவும் பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு சின்ன வெங்காய விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும்

  2. 2

    பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கி பிறகு தக்காளியை சேர்த்து மசியும் வரை நன்றாக வதக்கவும்

  3. 3

    மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி புதினா பச்சை மிளகாயை தண்ணீர் சேர்க்காமல் கரகரவென அரைத்துக் கொள்ளவும் தக்காளி மசிந்தவுடன் இந்த அரைத்த கலவையை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்... மட்டனை சேர்த்து மிதமான தீயில் எண்ணெயை பிரியும் வரை வதக்கவும்

  4. 4

    பிறகு இதில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள், கரம் மசாலா, மட்டன் மசாலா, உப்பு, சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும் பிறகு தயிர் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும் பிறகு அடுப்பை குறைந்த தீயில் வைத்து மட்டனை 30 நிமிடம் வேக வைக்கவும் தண்ணீர் விடத் தேவையில்லை குக்கரில் வேக வைப்பது என்றால் ஒரு கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் வேக விட்டு எடுக்கவும்

  5. 5

    மட்டன் வெந்தவுடன் அதில் 4 கப் (1000மிலி) தண்ணீர் உப்பு 1/2 எலுமிச்சை சாறு சேர்க்கவும்

  6. 6

    தண்ணீர் நன்றாக கொதித்து வரும் பொழுது ஊற வைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை கிளறவும் (கைவிடாமல் கிளறினால் குழைத்துவிடும் அடி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறவும்) 90% தண்ணீர் வற்றியதும் பிரியாணி பாத்திரத்தில் காற்று புகாதவாறு மூடி போட்டு மேலே ஒரு கனமான பாத்திரத்தை வைத்து குறைந்த தீயில் 15 நிமிடம் வைக்கவும்...

  7. 7

    பிறகு அடுப்பை அணைத்து 10 நிமிடம் கழித்து மூடியை திறந்து மெதுவாக கிளறவும்

  8. 8

    மட்டன் பிரியாணி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes