எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 8பிரெட் துண்டுகள்
  2. 2ஸ்பூன் பீட்ஸா சாஸ்
  3. 2ஸ்பூன் மயோனீஸ்
  4. 1ஸ்பூன் வெண்ணெய்
  5. 1வெங்காயம்
  6. 1தக்காளி
  7. 1/4கப் ஸ்வீட் கார்ன்
  8. 1ஸீபூன் மிளகு தூள்
  9. தேவையானஅளவு ஓரிகனோ
  10. 1ஸ்பூன் சில்லி ஃப்ளெக்ஸ்
  11. 1/4கப் சீஸ் துருவல்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பிரெட் துண்டுகளை வட்ட வடிவில் ஒன்று பெரிதும் மற்றொன்று அதை விட சிறிதாக கிண்ணம் வைத்து அல்லது கட்டர் வைத்து கட் செய்து கொள்ளவும்.முதலில் பெரிய வட்ட வடிவ கிண்ணம் கொண்டு 8 பிரெட் துண்டுகளை கட் செய்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு அதை விட சிறிய வட்ட வடிவ கிண்ணம் கொண்டு அதில் 4 பிரெட் துண்டுகளை மட்டும் கட் செய்து நடுப்பகுதி எடுத்து விட்டு அந்த ரிங் வடிவத்தை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு பவுலில் பீட்ஸா சாஸ்,மயோனீஸ், வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ளவும். இந்த கலவையை பெரிதாக நறுக்கிய 4 துண்டுகள் மீது தடவி கொள்ளவும்.

  4. 4

    அதன் மேல் ரிங் வடிவில் நறுக்கிய 4 பிரெட் துண்டுகளை ஒவ்வொன்றின் மீதும் வைத்து ஒட்டி விடவும்.ஒரு பவுலிங் வேக வைத்த ஸ்வீட் கார்ன், வெங்காயம், தக்காளி சிறிதாக நறுக்கியது, மிளகு தூள்,ஓரிகனோ, சில்லி ஃப்ளெக்ஸ் சேர்த்து கொள்ளவும்.

  5. 5

    இதில் சீஸ் துருவல் சேர்த்து நன்கு கலந்து விடவும்.இந்த கலவையை பிரெட் துண்டுகள் நடுவில் வைத்து கொள்ளவும்.

  6. 6

    இந்த பிரெட் துண்டுகளை பேக்கிங் ட்ரேயில் எடுத்து வைக்கவும்.ஓவனை 150 டிகிரி செல்சியஸ்ல் 3 நிமிடம் ப்ரீஹுட் செய்யவும்.பிறகு ஓவனில் வைத்து 10 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

  7. 7

    சூப்பரான கிரிஸ்பியான பிரெட் பீட்ஸா டிஸ்க் தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes